சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் தலைமைத் தன்மை கொண்டவர்கள். எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சியுடன் இருப்பார்கள். பெரிய மனசு கொண்டவர்கள் என்பதால், குடும்பம், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இவர்கள் திருமணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல, இவர்களின் வாழ்வில் வரும் மனைவி மிகவும் அழகாகவும், குணநலன்களில் சிறந்தவராகவும் இருப்பார். சிம்ம ராசி ஆண்கள் துணைவியிடம் அதிக அன்பும் நம்பிக்கையும் காட்டுவார். அதனால், இருவருக்கிடையேயான பந்தம் வலுவாகி, காதல் கடைசி வரை குறையாது. குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்கும்.