
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒரு மாதம் வரை தங்குகிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் பொழுது அவர் சில சுபயோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 01:53 மணிக்கு அவர் கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் நவம்பர் 16 வரை இருக்கும் அவர் பின்னர் விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தின் பொழுது ரவியோகம் உண்டாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)