Guru Vakra Peyarchi: தீபாவளிக்குப் பிறகு சனி பகவான் நேரடியாகவும், குரு பகவான் வக்கிர நிலையிலும் பயணிக்க உள்ளனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயமும், அதிர்ஷ்டமும் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத நாட்காட்டியின் படி இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு கர்மவினையை அளிப்பவரான சனி பகவான் மற்றும் தேவர்களின் குருவான குரு பகவான் ஆகிய இருவரின் இயக்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இதுவரை மீன ராசியில் வக்கிர நிலையில் பயணித்து வந்த சனி பகவான், தீபாவளிக்குப் பிறகு நேரடியாக பயணிக்க இருக்கிறார். அதே சமயம் குரு பகவான் கடகத்தில் வக்கிர நிலையில் அதாவது பின்னோக்கி நகர இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் வக்கிர இயக்கமும், சனியின் நேரடி இயக்கமும் நல்ல மாற்றங்களை கொண்டு வர உள்ளது.
குருவின் பெயர்ச்சி துலாம் ராசியின் கர்ம பாவத்தில் வக்கிரமாக இருக்கும்.
அதே நேரத்தில் சனி ஆறாவது வீட்டில் நேரடியாக சஞ்சரிக்கும்.
இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் வெற்றியைக் காண்பீர்கள்.
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும்.
வேலைப்பளு குறைந்து மன அமைதி கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களுக்கு எதிராக நடந்து வரும் சதித் திட்டங்களை முறியடித்து முன்னேறிச் செல்வீர்கள்.
இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
திடீரென்று பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.
தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
34
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி இயக்கமும், குருவின் வக்கிர இயக்கமும் சாதகமாக இருக்கும்.
உங்களது செல்வ வீட்டில் குரு வக்கிரமாக இருப்பார். அதே நேரத்தில் சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
இதன் காரணமாக நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
வேலை மற்றும் வணிகத்தில் திடீர் பணவரவு, முன்னேற்றம், வெற்றியைக் காண்பீர்கள்.
சமூகத்தில் உங்களுக்கென தனித்துவமான மற்றும் நேர்மையான பிம்பம் உருவாகும்.
உங்கள் பேச்சு மற்றும் அறிவுத் திறமை காரணமாக மக்களை ஈர்ப்பீர்கள்.
வேலை தேடுபவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
தேவையில்லாத செலவுகள் குறைந்து, பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் நிதி ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி பயணமும் குருவின் வக்கிர பயணமும் நன்மைகளைத் தரும்.
சனி உங்கள் ராசிக்கு அதிபதியாவார். அவர் உங்கள் ராசியில் இருந்து மூன்றாவது வீட்டில் நேரடியாக இருப்பார். குரு உங்கள் ராசியில் இருந்து ஏழாவது வீட்டில் வக்கிர நிலையில் பயணிப்பார்.
எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
முடிவுகளை எடுக்க முடியாமல் குழப்பத்தில் தவிர்த்து வருபவர்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
குழந்தை இல்லாமல் தவித்து வரும் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் கிடைக்கும்.
வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)