
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல குணாதிசயங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் பிடிவாதம். சிலருக்கு இந்த குணம் வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. சிலர் தங்களின் வீண் பிடிவாதத்தால் அழிவுப் பாதையை நோக்கி செல்வார்கள். இந்தப் பிடிவாத குணம் அவர்களை பொறுமையற்றவர்களாகவும், குணம் குன்றியவர்களாகவும் காட்டுகிறது. இவர்கள் எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் இந்த குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற வாதத்திலேயே உறுதியாக இருப்பார்கள்.
இருப்பினும் இந்த பிடிவாத குணம் சிலருக்கு சாதகமாக அமையலாம். ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பிடிவாதத்தின் மறு உருவமாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் உறுதியான மற்றும் நிலையான மனநிலை கொண்டவர்கள். இவர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்றுவது கடினம். இவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். இவர்களின் பிடிவாதம் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக இருந்தாலும், சில சமயங்களில் மற்றவர்களுடன் மோதலை உருவாக்கலாம். இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பதன் பின்னணியில் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதியான மனநிலை காரணமாக உள்ளது.
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பு நிறைந்தவர்கள் இவர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இதன் காரணமாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பண்புகளை பெற்றுள்ளனர். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை மாற்றுவதற்கு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் முடிவு எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கொடுக்க மற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பார்கள். இந்த முயற்சியில் தோல்வி அடைந்தால் தன் பக்கம் வராதவர்களை எதிர்த்து நிற்கவும் தயங்க மாட்டார்கள். பிறரின் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காமல் சுயமாக முடிவெடுப்பார்கள். தங்கள் ஆளுமையை நிரூபிக்க வேண்டும் ஆர்வமே இவர்கள் பிடிவாதத்திற்கு காரணமாக அமைகிறது.
விருச்சிக ராசிக்காரர்களும் பிடிவாத குணம் நிறைந்தவர்கள். இவர்கள் உறுதியான மனநிலை கொண்டவர்கள். தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்கிற தீவிர ஆசையுடன் செயல்படுபவர்கள். இவர்கள் தங்களை நிரூபிக்கவும், மற்றவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கும், தங்கள் இலக்குகளை அடைவதற்கும் எந்த எல்லைக்கும் செல்வார்கள். எத்தகைய கடுமையான சூழல் வந்தாலும் பிறரின் ஆலோசனைகளை புறக்கணித்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். இவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவும், தங்கள் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் பிடிவாத குணமாக இருப்பார்கள். நட்பு மற்றும் உறவுகளை விட பிடிவாதமே அவர்களுக்கு முக்கியமானதாகும்.
கும்ப ராசிக்காரர்கள் பிடிவாத குணத்திற்கு பெயர் போனவர்கள். அவர்கள் தங்கள் வயதை விட அனுபவம் நிறைந்த போல தோற்றத்துடன் விளங்குவார்கள். பிறரிடம் நட்பாக பழகினாலும் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் இடும் கட்டளைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாற்றத்தையே தழுவுவீர்கள். ஆனால் அவர்கள் அவர்களின் கருத்தை உங்கள் மீது திணிக்க முயற்சி செய்வார்கள். அதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எடுத்த முடிவுகளை நீங்கள் மாற்ற விரும்பினால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்களின் தனித்துவம் அல்லது சுதந்திரத்தை பாதிக்கும் விஷயத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தாங்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என்கிற தோற்றத்தை பிறருக்கு நிரூபிக்க வேண்டும் என்கிற ஆர்வமே அவர்களை பிடிவாதக்காரர்களாக மாற்றுகிறது.
மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் நடைமுறைவாதிகளாக இருப்பார்கள். இவர்கள் பொறுப்புணர்வு நிறைந்தவர்கள். சனிபகவான் இந்த ராசியை ஆள்வதால் இவர்கள் ஒழுக்கம் மற்றும் உறுதி நிறைந்தவர்கள். இவர்கள் வலுவான கடமை உணர்வை கொண்டிருப்பவர்கள். எனவே அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் குறிக்கோள்களில் கண்டிப்புடன் இருப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் பிடிவாதமானவர்களாக தோன்றுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் தெளிவான திட்டத்தை வைத்திருப்பார்கள். கடின உழைப்பு ஒழுக்கத்துடன் இணைந்து தெளிவான சிந்தனை அவர்களை வெற்றிகரமானவர்களாக மாற்றுகிறது. அதே சமயம் இதில் ஏதேனும் குறுக்கீடு நிகழ்ந்தால் அதை எதிர்ப்பதற்கு தயங்குவதில்லை. தங்களது திட்டத்தில் உறுதியானவர்களாக இருப்பார்கள்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்கள் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மையை ஏசியாநெட் நிறுவனம் சரி பார்க்கவில்லை. இதன் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் வேறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை கலந்து ஆலோசிப்பது நல்லது)