Astrology: துலாம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்.! 4 ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது.!

Published : Sep 08, 2025, 10:13 AM IST

கிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள். நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

PREV
15
துலாம் ராசிக்கு செல்லும் செவ்வாய் பகவான்

ஜோதிட சாஸ்திரங்களில் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இதன் விளைவு மனிதர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பகவான் துலாம் ராசியில் செப்டம்பர் 13, 2025 அன்று பெயர்ச்சி அடைய இருக்கிறார். துலாம் ராசி செவ்வாயின் எதிரி ராசியாக அறியப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சுப பலன்களையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் அனுபவிக்க உள்ளனர். இந்த பதிவில் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

25
துலாம்

செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க உள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் லக்ன வீட்டிற்கு பெயர்ச்சி அடைவார். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். செவ்வாய் பகவான் தைரியம், ஆற்றல், வீரத்திற்கு காரகரான கிரகம் என்பதால் உங்கள் தைரியம், வீரம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய திட்டத்தில் வெற்றி பெறலாம். உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உறவுகள் மேம்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். செவ்வாய் பகவான் உங்களுக்கு ஏற்ற திசையை வழங்குவார். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வணிகத்தில் பெரும் வெற்றியை பெறுவீர்கள்.

35
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் உங்கள் செல்வ ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்க இருக்கிறார். எனவே உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கலாம். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். தொழிலதிபர்களுக்கு வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதிநிலை மேம்படும். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் ஏற்படும். உங்கள் திறமையான பேச்சு மூலம் வணிகத்தில் இரட்டுப்பு லாபத்தை பெறுவீர்கள். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் உங்கள் தொழிலை விரிவாக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

45
கும்பம்

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். கும்ப ராசியின் விதி இடத்திற்கு செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் கிடைக்கும். உயர் கல்வி படிக்க நினைப்பவர்களுக்கு கனவு நிறைவேறும். வெளிநாட்டில் வேலை செய்ய துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடும். அறிவு சார் மற்றும் ஆன்மீக பயணங்கள் ஏற்படலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்தக் காலகட்டம் ஏதுவாக அமையும்.

55
மகரம்

மகர ராசிக்காரர்களின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்திற்கு செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார் இதன் காரணமாக அவர்களின் தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும். திருப்தி இல்லாத வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில், நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக போட்டியாளர்கள், எதிரிகள் விலகி விடுவதால் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். ஒட்டுமொத்த நிதி நிலைமையும் மேம்படுவதால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மிகப்பெரிய ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories