ராகு மற்றும் கேது ஆகிய நிழல் கிரகங்களின் பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியமான நிகழ்வாகும். இவை ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும். ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளன. இந்த பெயர்ச்சியால் மேஷம், கடகம், துலாம், தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு சொத்து, பணவரவு, வீடு, நிலம் போன்றவற்றில் பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.