
எங்க வீட்டுக்கு மகாலெட்சுமியே மருமகளாக வந்திருப்பதாக சில மாமியார்கள் தங்கள் மருமகள்களை சொல்லி கேள்விபட்டு இருக்கிறோம். அதற்கு காரணம் திருமணத்திற்கு முன் இருந்த இடம் தெரியாமல் இருந்த ஆண்கள், திருணத்திற்கு பிறகு பெரிய பதவி கிடைத்து, புகழுடன் வலம் வரும் நிகழ்வுகளே. ஜோதிட ரீதியாக சில பெண்கள், திருணமாகி கணவர் குடும்பத்தில் கால் பதிக்கும் நேரத்தில், அந்த குடும்பத்தின் நிதிநிலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதவும் கணவரின் வாழ்க்கையில் புதுப்பொலிவு பிறக்குமாம். பெண்களின் ராசி கணவருக்கு பதவி உயர்வு, பணம், புகழ் என ஒவ்வொரு வெற்றியும் அவரை தொற்றிக்கொள்ளுமாம். அந்த சக்தி வாய்ந்த யோகமுடைய பெண்கள் எந்த ராசி தெரியுமா?
கடக ராசி பெண்கள் எப்போதும் தங்கள் கணவருக்கு ராஜயோகம் அளிப்பார்கள் என்கின்றன ஜோதிட நூல்கள். தொலைநோக்கு பார்வை, பரந்த சிந்தனை, கணவர் மீது அதிக அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை கடகராசி பெண்களின் சுபாபமாக இருக்கும் என கூறப்படுகிறது. எந்த ஒரு செயலையுிம் திட்டமிட்டு நேர்மையாக செய்யும் கடக ராசி பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தையும் நல்லமுறையில் பார்த்துக்கொள்வார்ளாம். அதவும் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து அந்த குடும்பத்தையே வழிநடத்துவார்கள் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
கடக ராசியின் அதிபதி இரவில் நமக்கு வழிகாட்டும் கிரகமான சந்திரன். சந்திரன் என்பது மனதையும் உணர்வுகளையும் உள்ளத்தையும், கட்டுப்படுத்தும் கிரகம் என்கிறது ஜோதிடம் . இதனால் இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் கனிவான குணம் கொண்டவர்களாகவும், பாசம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்களாம். தங்களுடைய கணவருக்கு தோல்வி ஏற்பட்டால் கூட அவரை மீண்டும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உள்ளதாக அடித்து சொல்கின்றன ஜோதிட நூல்கள்.
கடகராசி பெண்கள் தனது கணவரை உற்சாகப்படுத்தி சாதிக்க வைப்பார்களாம். கடக ராசி பெண்களிடன் தன்னம்பிகை பேச்சும், உற்சாகப்படுத்தும் விதத்துடன் கூடிய கனிவும் குமாஸ்தாவாக இருக்கும் கணவரை கோடீஸ்வரன் ஆக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுணர்கள். சோர்ந்து கிடக்கும் கணவர் கடக ராசி பெண்களின் கண்களை பார்த்தாலே உற்சாகம் பெறுவார்களாம். அப்படி ஒரு சக்தி கடக ராசி பெண்களுக்கு உண்டாம்.
கடக ராசி பெண்கள் வெறும் காதலால் கணவரை உயர்த்தமாட்டார்களாம். நிதி, முதலீடு, உளவியல் மேனேஜ்மெண்ட், தெளிவான பேச்சு, எதிர்கால திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தங்கள் கணவருக்கு அனுபவங்களின் அடிப்படையில் வழிகாட்டி செயல்பட்டு பக்க பலமாக இருப்பார்களாம். சில நேரங்களில் கணவருக்கு வரவிருக்கும் அபாயங்களையும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கு தயாராகச் செயற்பட வைக்கும் ஜாதக சக்தியும் இவர்களுக்கு உண்டு என்கிறது ஜோதிடம்.
கடக ராசிக்கார பெண்கள் வீடு, குடும்பம், சமையல், கலை, விருந்தோம்பல் ஆகியவற்றில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். கணவரின் மனநிலையை அமைதிப்படுத்துவது எப்படி என்று அவர்கள் நன்கு அறிந்து அதன்படி நடந்து சாதிக்கும் மனநிலை அவர்களுக்கு உண்டு. கடக ராசி பெண்களால் உருவாக்கப்படும் நிம்மதியான வீட்டுப் பராமரிப்பே, அந்த ஆணின் வெளியுலக வெற்றிக்கான சக்தியாக இருக்கும்.
தேடி வரும் தலைமை பதவி
கடக ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆணகள் அரசியலில் இருந்தால் அவர்களுக்கு ஒரு கட்சியை தலைமையேற்கும் நிலையும், நிறுவனத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அதே நிறுவனத்தில் அதிகாரம் மிக்க பதவியும் கிடைக்குமாம். அதேபோல் தொழில் செய்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்து பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்களாம். மேலும் சமூக சேவையில் சேர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகழ்பெரும் வாய்ப்பும் பலருக்கு ஏற்படுமாம். கடகராசி பெண்களின் கணவர் சினிமா துறையில் இருந்தால் அர்கள் சூப்பர் ஸ்டார்களாக உயர்ந்து சாதனை படைக்கும் சூழல் ஏற்படுமாம்.
பல ஜோதிடர்களின் கூற்று படி, கடக ராசிக்கார பெண் புகுந்த வீட்டிற்குள் வருவது பல்வேறு யோகங்களை வழங்கும். குடும்பத்தில் முன்னோர்களின் தோல்வியையும், பித்ரு தோஷத்தையும் குறைக்கும் எனவும் ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. இதனால் தான் அவருடைய கணவருக்கு தடுக்கப்பட்ட யோகங்கள் அனைத்து திறக்கப்பட்டு புதிய வழி பிறக்கும்.
நீங்கள் ஒரு கடக ராசிக்கார பெண் என்றால், உங்கள் கணவருக்கு மட்டும் அல்ல, உங்கள் வீட்டுக்கும் மட்டுமல்லாமல் அவருடை நெருங்கிய உறவினருக்கு கூட ராஜயோகம் பிறக்கும் என்கின்ற ஜோதிட நூல்கள். நீங்கள் உங்கள் பாசத்தாலும், அமைதியான ஆளுமையாலும் உறுதியாக உயர்த்தி அவரது வாழ்க்கையை பொலிவு பெற செய்வீர்கள். அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும், உங்கள் கைகளைப் பிடித்த நாள் முதலே, அவர் வாழ்க்கையில் பதவியும் புகழும் தேடி வரும். காரணம் அந்த அதிர்ஷ்டத்தின் பெயரே நீங்கள் தானே !