Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த கணவரா இருக்க மாட்டாங்க.! இவங்க கூட வாழ்றது அக்கப்போரா இருக்கும்.!

Published : Nov 13, 2025, 02:32 PM IST

Worst husband zodiac signs: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
சிறந்த கணவராக இல்லாத 4 ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம், பலவீனங்கள் உண்டு. சில குணாதிசயங்கள் ஒரு நபரை சிறந்த கணவராக மாற்றுவதற்கு சவாலாக இருக்கும். சில ராசியில் பிறந்த ஆண்கள் திருமண பந்தத்தில் முழு ஈடுபாடு காட்டுவதற்கும், நிலைத்தன்மையை வழங்குவதற்கும் சிரமப்படலாம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அதன்படி சிறந்த கணவராக இருக்க வாய்ப்பு இல்லாத நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பாகவே அதிக ஆற்றல், உத்வேகம், தீவிரம் மற்றும் சுயநலம் கொண்டவர்கள். இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பார்கள். இதனால் துணையின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் இருப்பார்கள். இவர்களின் போட்டி குணங்கள் சில நேரங்களில் மனைவியுடன் கூட மோதல்களை ஏற்படுத்தும். 

எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதால் மனைவியை கூட போட்டியாளர்களாக கருதுவார்கள். புதிய சாகசங்கள் மற்றும் சுதந்திரம் காரணமாக திருமண பந்தங்களில் அதிகமாக ஈடுபாடுகள் காட்டாமல் இருப்பார்கள்.

36
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இரட்டை தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். புதன் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள், நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அதேசமயம் விரைவான மனமாற்றம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு நிமிடம் வேடிக்கையாக பேசுவார்கள் அடுத்த நிமிடமே குழப்பமான சூழலை உணர்வார்கள். இந்த நிலையற்ற தன்மை துணைக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தலாம். 

திருமண உறவில் ஆழமான அர்ப்பணிப்பு காட்டுவதிலும் இவர்களுக்கு சிரமங்கள் இருக்கலாம். இயற்கையாகவே அனைத்து விஷயங்களிலும் நாட்டம் கொண்ட இவர்கள், துணையின் உணர்வுகளை விட வேறு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தலாம். இதனால் துணை புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம்.

46
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் மற்றும் சாகசங்களை விரும்புபவர்கள். இவர்கள் திருமண வாழ்க்கையின் கட்டுப்பாடுகள் காரணமாக மிகுந்த சிரமப்படுவார்கள். இவர்களுக்கு சுதந்திரம் மிக முக்கியம் என்பதால் நிலையான மற்றும் வழக்கமான குடும்ப வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு இவர்கள் எரிச்சலை ஏற்படுத்துவார்கள். இவர்கள் பெரும்பாலும் தொலைநோக்கு திட்டங்களில் கவனம் செலுத்தாமல் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷங்களை அனுபவிக்க விரும்புவார்கள். இது குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக இருக்கலாம். இவர்களின் உற்சாகமான குணம் இவர்களை சிறந்த நண்பர்களாக மாற்றினாலும், குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.

56
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள். இவர்களின் அளவுக்கு மீறிய இலட்சியமும், கடின உழைப்பும் குடும்ப வாழ்க்கைக்குள் வந்தால் மனைவியை கவனிக்காமல் விடலாம். பெரும்பாலும் தங்கள் தொழில் மற்றும் இலக்குகளை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து குடும்ப உறவுகளுக்கு குறைவான நேரத்தை ஒதுக்குவார்கள். 

இவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் பெரிய அளவில் கட்டுப்படுத்த மாட்டார்கள். இவர்களின் கட்டுப்பாடு மற்றும் கண்டிப்பு சில நேரங்களில் துணை மீது ஆதிக்கம் செலுத்துவது போல் தோன்றலாம். இதனால் வீட்டின் மகிழ்ச்சியான சூழல் குறையலாம்.

66
இறுதியாக

ஜோதிட ரீதியாக மேற்குறிப்பிடப்பட்ட ராசியைச் சேர்ந்த ஆண்கள் சிறந்த கணவர்களாக இருப்பது கடினம் என்று கருதப்பட்டாலும், இது பொதுவான கண்ணோட்டம் மட்டுமே. எந்த ஒரு ராசியும் மோசமானது கிடையாது. அவர்களின் குணாதிசயங்கள் திருமணங்களில் சிரமத்தை உருவாக்கலாம். தனிப்பட்டவர்களின் நடத்தை மற்றும் திருமண வாழ்க்கை அவர்களது ராசி நட்சத்திரம் மட்டுமல்லாமல் அவர்களது தனிப்பட்ட ஜாதக அமைப்பு, வளர்ப்பு முறை, வளர்ந்த சூழல், வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories