Astrology: 12 மாதங்களுக்குப் பின் சூரியன் வருணன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!

Published : Nov 13, 2025, 11:00 AM IST

Navpancham Rajyog Lucky zodiac signs: ஜோதிடத்தின்படி கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரிய பகவானும், வருண பகவானும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் அமைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சூரியன் வருணன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்

ஜோதிடத்தின்படி கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரிய பகவான் ஒரு ராசியில் சுமார் 30 நாட்கள் வரை தங்குகிறார். அவரின் பெயர்ச்சியின் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கிறது. சூரிய பகவான் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். நவம்பர் 16ஆம் தேதி அவர் விருச்சிக ராசிக்குள் நுழைவார். அங்கு ஏற்கனவே செவ்வாய் மற்றும் புதன் ஆகியோர் இருக்கின்றனர். சூரியன் பகவான் செவ்வாயுடன் இணைந்து ஆதித்ய மங்கள ராஜயோகத்தையும், புதனுடன் இணைந்து புதாத்திய ராஜயோகத்தையும் உருவாக்குகிறார்.

25
நவபஞ்சம ராஜயோகம் 2025

இந்த நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி வருணனுடன் (நெப்டியூன்) இணைந்து சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார். நவம்பர் 21ஆம் தேதி சூரியன் மற்றும் வருணன் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இது நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறது. சூரியன் விருச்சிக ராசியிலும், வருணன் மீன ராசியிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சக்திவாய்ந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் நன்மை பயக்கும். சூரியன் மற்றும் வருணன் இருவரும் கடக ராசியின் ஐந்தாவது வீட்டில் இணைகின்றனர். இதன் விளைவாக இந்த ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். 

நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வருமானத்திற்கான கதவுகள் திறக்கப்படும். எதிர்காலத்திற்காக சேமிப்பை தொடங்குவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளை எதிர்பார்க்கலாம்.

45
சிம்மம்

சிம்ம ராசியின் நான்காவது வீட்டில் இந்த ராஜ யோகம் உருவாகிறது. எனவே இந்த காலகட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்களை அனுபவிக்கலாம். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் கனவுகள் நிறைவேறும். 

சூரியனின் பார்வை கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டில் விழுகிறது. இதனால் நீங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க பலன்களை அனுபவிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் நீங்கும்.

55
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பல வழிகளில் மகிழ்ச்சியைத் தரும். துலாம் ராசியின் செல்வ ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். எனவே நவம்பர் மாத இறுதியில் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். 

அரசாங்க வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அரசுத் துறை ரீதியாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திட்டங்கள் கைக்கு கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories