Nov 13 Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கபோகுது.! தயாரா இருங்க.!

Published : Nov 12, 2025, 04:19 PM IST

Nov 13 Thulam Rasi Palan : நவம்பர் 13, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 13, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் அமைதியும், சமநிலையும் காணப்படும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சில திட்டங்கள் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இது நன்மையைத் தரும். இதன் காரணமாக மற்ற முக்கிய வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். புதிய யோசனைகள் மூலம் தொழிலில் புதிய வெற்றிகளை காண்பீர்கள்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையில் பெரிய லாபமோ, இழப்போ இருக்காது. நிதி வரவு சீராக இருக்கும். சராசரியான பண வரவு கிடைக்கும். செலவுகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணத்தை செலவிடுவது நல்லது. நிலம் வாங்குவது அல்லது புதிய முதலீடுகள் போன்றவற்றை இன்று தவிர்ப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று காதல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். துணையுடன் பேசும் உரையாடல்கள் அன்னியோன்யத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். குடும்பத்தில் முன்பு இருந்த தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி தெளிவு பிறக்கும். அதிக எதிர்பார்ப்புகளை தவிர்த்து மகிழ்ச்சியான நாளை அனுபவிக்கவும்.

பரிகாரங்கள்:

இன்று முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. சுக்கிரனுக்கு உரிய தெய்வமான மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் சமர்ப்பித்து வழிபடலாம். மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் மேற்கொள்ளலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories