Astrology: இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அழகு தேவதைகளாகவும், அறிவாளிகளாகவும் பிறந்தவர்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Oct 17, 2025, 02:51 PM IST

Women zodiac signs full of beauty and intelligence: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்த பெண்கள் அழகுடன் மிகுந்த புத்திக் கூர்மை உடையவர்களாகவும் விளங்குவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
அழகும் அறிவும் இணைந்து பிறந்தவர்கள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிகளும் தனித்துவமான சிறப்புகளை கொண்டுள்ளனர். சிலர் இயல்பாகவே அழகாக திகழ்வார்கள். சிலருக்கு இயல்பிலேயே புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். சிலருக்கு அழகுடன், புத்திசாலித்தனமும் இணைந்திருக்கும். அந்த வரிசையில் குறிப்பிட்ட மூன்று ராசியில் பிறந்த பெண்கள் அழகு மற்றும் அறிவை ஒரு சேரக் கொண்ட அதிசய பிறவிகளாக இருப்பார்களாம். 

இவர்கள் தங்களுடைய புத்தி கூர்மை அறிவுத்திறன் மற்றும் தனிப்பட்ட ஆளுமையால் அனைவரின் கவனத்தை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
துலாம்
  • துலாம் ராசியை சுக்கிர பகவான் ஆள்கிறார். சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், செல்வம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். 
  • எனவே துலாம் ராசியைச் சேர்ந்த பெண்கள் இயல்பாகவே அழகு, கருணை மற்றும் புத்திசாலித்தனத்தால் அனைவரையும் ஈர்ப்பார்கள். 
  • இவர்களின் ஆளுமை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 
  • இவர்களின் அழகு வெளிப்படையானது என்றாலும், இவர்களின் புத்திசாலித்தனம் மிகவும் ஆழமானது. 
  • துலாம் ராசிப் பெண்கள் எந்த சூழ்நிலையானாலும் சமநிலை, நேர்மை, நீதியை நிலைநாட்ட முயற்சிப்பார்கள். 
  • இவர்கள் ஆழ்ந்த பகுப்பாய்வு, ராஜதந்திரம் மற்றும் சாதுரியம் நிறைந்தவர்கள். 
  • பிரச்சனையை தீர்ப்பதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். 
  • துலாம் ராசிப் பெண்கள் அழகு மற்றும் கூர்மையான புத்தியின் கலவையாக கருதப்படுகின்றனர்.
34
கன்னி
  • பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்கும் புதன் பகவான் கன்னி ராசியை ஆள்கிறார். 
  • எனவே கன்னி ராசி பெண்களும் புத்திசாலித்தனத்தையும் அழகையும் ஒருங்கே பெற்ற ராசியினராக உள்ளனர். 
  • இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் இயல்பான பணிவு மற்றும் அறிவுக்கூர்மையால் மிகவும் அழகாக தெரிகின்றனர். 
  • இவர்கள் தங்கள் தோற்றத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 
  • இவர்கள் சிக்கல்களை தீர்ப்பதிலும், ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர். 
  • இவர்கள் வாழ்க்கையை நடைமுறை அணுகுமுறையுடனும், புத்திசாலித்தனத்துடனும் அணுகுகின்றனர். 
  • தனிப்பட்ட வாழ்க்கை தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் தங்களது லட்சியங்களை அடைய அழகுடன் சேர்த்து புத்திசாலித்தனத்தை பயன்படுத்தும் கலையை கற்றுள்ளனர்.
44
சிம்மம்
  • சிம்ம ராசி சூரிய பகவானால் ஆளப்படும் ராசியாகும். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் அசைக்க முடியாத தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன் மற்றும் மறுக்க முடியாத அழகிற்கு பெயர் பெற்றவர்கள். 
  • இவர்கள் அனைவரையும் ஈர்க்கும் காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் இயர்பிலேயே தலைமைப் பண்பு கொண்டு விளங்குகின்றனர். 
  • கூர்மையான மனமும், படைப்பாற்றலும் இவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். இவர்கள் விரைவாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள். 
  • எந்த ஒரு முடிவையும் நம்பிக்கையுடனும், தெளிவுடன் எடுக்கும் திறன் இவர்களிடம் உண்டு. அனைத்து துறைகளிலும் தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவார்கள். 
  • இவர்களின் தலைமைத்துவத் திறனும், ஆளுமை பண்புகளும் இவர்களை அழகு மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்களாக காட்டுகின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories