Chanakya Niti: உயிரே போனாலும் இந்த 5 பேர் வீட்ல சாப்பிடாதீங்க! சாணக்கியர் எச்சரிப்பது ஏன்?

Published : Jul 02, 2026, 07:45 PM IST

Chanakya Niti: சாணக்கிய நீதி படி,  உயிர்போகும் நிலை வந்தால் கூட சில பேர் வீட்டில் சாப்பிடக் கூடாதாம். அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்த 5 பேர் யார்? வாங்க பார்க்கலாம்.

PREV
14
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த 5 பேர் வீட்டில் சாப்பிடாதீங்க

உணவை நாம் தெய்வீகமாக பார்க்கிறோம். யாராவது கூப்பிட்டு சாப்பாடு போட்டால் இல்லை அன்னதானம் செய்தால் அதை நாம தெய்வ பிரசாதமாக நினைச்சு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் சாணக்கியர் என்ன சொல்றாருன்னா, 5 பேர் கையால மட்டும் சாப்பாடு வாங்கவே கூடாதாம். அப்படி என்னதான் காரணம்? அந்த 5 பேர் யார்? அவங்க வீட்ல ஏன் சாப்பிடக் கூடாது? சாணக்கியர் சொன்னதை இப்ப பார்க்கலாம்.

24
நேர்மையற்றவர் வீடு

நேர்மை இல்லாதவங்க வீட்டில் நாம் சாப்பிடக் கூடாது. தில்லுமுல்லு, அநியாயம், அதர்மம் செய்து சம்பாதிக்கிறவங்க வீட்டில் தெரியாம கூட சாப்பிடக் கூடாதாம். பசியால வாடினாலும் சரி, இந்த மாதிரி வீடுகளில் சாப்பிடறது நல்லது இல்லை என்று சாணக்கியர் சொல்கிறார். அவங்க கையால சாப்பாடு வாங்கினால் அவங்களோட பாவத்தில் நமக்கும் பங்கு வந்து சேரும்னு சொல்றாங்க.

34
கோபத்துடன், வசைபாடும் நபரின் வீடு

மனுஷங்களுக்கு கோபம் வர்றது சகஜம்தான். ஆனால் நேரம் காலம் பார்க்காம எல்லார் மேலயும் கோபத்தைக் காட்டி, வாய்க்கு வந்தபடி திட்றவங்க வீட்ல சாப்பிடறது நல்லதே இல்லைன்னு சாணக்கியர் சொல்கிறார். ஏன் என்றால் இவங்க சாப்பாடு போடுற பேர்ல மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. இந்த மாதிரி ஆட்கள் வீட்ல சாப்பிட்டால் அந்த சாப்பாடு நம்ம உடம்புக்கும் ஒத்துக்காது.

44
நாத்திகர் வீடு, வட்டிக்கு பணம் கொடுப்பவர் வீடு

நாத்திகர் வீடு: க‌டவுளை நம்பாத, பூஜைகள் செய்யாத வீட்டில் சாப்பிடக் கூடாது. வேதங்களை அவமதிப்பவர்கள், தர்மத்தை பின்பற்றாதவர்கள் வீட்டில் சாப்பிடுவது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். 

விருந்தினரை மதிக்காதவர் வீடு: 'விருந்தினர் கடவுளுக்கு சமம்' என்பது நம்ம ஊர் பழமொழி. ஆனால் வீட்டுக்கு வர்றவங்களை மதிக்காமல் அவமானப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடறது நல்லதல்ல. அவங்க கூப்பிட்டாலும் போகக் கூடாது. 

வட்டிக்கு பணம் கொடுப்பவர் வீடு: வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை கஷ்டப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடக் கூடாதுன்னு சாணக்கியர் சொல்றார். ஏன்னா, அது நியாயமில்லாத வழியில சம்பாதிச்ச பணம். அந்த பாவப் பணத்துல செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டா, அந்த பாவத்துல நமக்கும் பங்கு கிடைச்சிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories