செவ்வாய் அருளால் உருவான ராஜயோகம் – ஜனவரி 21 வரை நீங்க தான் லச்சாதிபதி; வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?

Published : Nov 06, 2024, 07:15 AM ISTUpdated : Nov 06, 2024, 07:52 AM IST

Vriddhi Yoga 2024 Palan in Tamil: கடக ராசியில் செவ்வாய் பகவான் நீச நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜனவரி 21 வரை இந்த ராசியிலேயே அவர் இருப்பார். இதனால் யாருக்கெல்லாம் ராஜயோகம் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க…

PREV
18
செவ்வாய் அருளால் உருவான ராஜயோகம் – ஜனவரி 21 வரை நீங்க தான் லச்சாதிபதி; வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?
Zodiac Signs, Mars Transit 2024, Mars in Cancer, Viruddhi Yoga Palan in Tamil

Vriddhi Yoga 2024 Palan in Tamil: கடக ராசியில் செவ்வாய் பகவான் நீச நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜனவரி 21 வரை இந்த ராசியிலேயே நிலைபெற்று இருப்பார். பொதுவாக செவ்வாய் ஒரு ராசியில் 48 நாட்கள் மட்டுமே சஞ்சரிப்பார். ஆனால், நீச ராசியான கடகத்தில் 64 நாட்களுக்கு மேல் நிலைத்து நிற்பார். இதைத்தான் ஜோதிட சாஸ்திரத்தில் குஜ ஸ்தம்பனம் என்று கூறுவார்கள். இந்த குஜ ஸ்தம்பனத்தால் சில ராசிகளுக்கு கிடைக்க வேண்டிய சுப பலன்கள் தடைபடும். அதே நேரத்தில் வேறு சில ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கும்.

28
Raja Yoga, Viruddhi Yoga, Mars Transit

மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். மற்ற ராசிக்காரர்கள் தினமும் முறையாக ஸ்கந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதன் மூலம் குஜ ஸ்தம்பன தோஷங்கள் நீங்கும்.

38
Vriddhi Yoga 2024 Palan in Tamil, Vriddhi Yogam Palan in Tamil

மேஷம்:

மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் நான்காம் வீட்டில் அமர்வதால் நிச்சயம் சுப யோகங்களைத் தர வாய்ப்புள்ளது. நில லாபம் உண்டாகும். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நின்று போன பதவி உயர்வுகள் இப்போது கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். வேலை, தொழிலில் மட்டுமல்லாமல் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

48
Raja Yoga Palan in Tamil, Vriddhi Yoga Palan in Tamil

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் எடுத்த காரியம் அனைத்தும் கூடி வரும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரம் புதிய உச்சத்தைத் தொடும். வேலை, திருமண முயற்சிகள் கைகூடும். பயணங்கள் லாபகரமாக அமையும். திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடி முடியும். உடல்நலக் குறைவு, தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மன அழுத்தம் குறையும்.

58
Horoscope, Viruddhi Yoga Palan in Tamil

கன்னி:

கன்னி ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் நிலைபெற்று இருப்பதால் நீண்ட நாள் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாள் தனிப்பட்ட மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பிரபலமானவர்களுடன் லாபகரமான தொடர்புகள் ஏற்படும். வருமானம் தொடர்பான எந்த முயற்சியும் பலன் தரும். வேலை, தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சீரிய குடும்பத்தில் திருமண உறவு ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு சூப்பரான வேலை கிடைக்கும்.

68
Vriddhi Yoga 2024 Palan in Tamil, Zodiac Signs

துலாம்:

துலாம் ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் வேலையில் நிலையான தன்மை உண்டாகும். சம்பளம், படிகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சொத்து பிரச்சனைகள், வழக்குகள் சுமூகமாக தீரும். உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் ஏற்படும். புனித யாத்திரை, சுற்றுலா செல்ல அதிக வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

78
Astrology, Vriddhi Yogam Palan in Tamil

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளும் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் சேரும். புனித யாத்திரை, சுற்றுலா செல்ல அதிக வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து பிரச்சனைகள், வழக்குகள் சாதகமாக முடியும். பொருளாதார மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

88
Horoscope, Viruddhi Yoga, Mars Transit

மீனம்:

மீன ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். பிரபலமானவர்களுடன் லாபகரமான தொடர்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஏற்படும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். வேலை, திருமண முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories