ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ராகு பெயர்ச்சி – இந்த 3 ராசியினருக்கு விளையாட்டு காட்டும் ராகு – தலைகீழாக மாறும் லைஃப்!

First Published | Nov 5, 2024, 10:50 AM IST

Rahu Peyarchi 2025 Palan Tamil: 2025 மே 18 அன்று ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றன. இந்த ராகு பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்கள் ஏற்படக்கூடும். பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

Rahu Ketu Peyarchi Palan 2025, Rahu Transit 2025

Rahu Peyarchi 2025 Palan Tamil: ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகங்கள் ராகு மற்றும் கேது. வரும் 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் ராகு பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை செய்கிறாரோ அதே அளவிற்கு கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர் ராகு பகவான். இன்னும் 2 மாதங்களில் 2025 புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த புத்தாண்டில் ராகு கேது பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதில் ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றன. இந்த ராகு பெயர்ச்சி யாருக்கெல்லாம் யோகத்தை கொடுக்க போகிறது என்று பார்க்கலாம் வாங்க…

Rahu Transit in Aquarius, Rahu Peyarchi 2025

மேஷம்:

கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் ராகு மேஷத்திற்கு நிதி நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். வருமானம் பாதிக்கப்படும். வேலையில் கவனமாக இல்லையென்றால் வேலை போகும் நிலை கூட வரலாம். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக் கூடும். வியாபாரத்தை இழுத்து மூடும் நிலை வரலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மன அழுத்தம் உண்டாகும். நீங்கள் சேமித்து வைத்த பணம் கரையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும். பேசும் போது வார்த்தையில் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் சண்டை, சச்சரவு ஏற்படும்.

Tap to resize

Rahu Peyarchi 2025, 2025 Rahu Transit, Horoscope

கடகம்:

இந்த ராசிக்கு ராகு பகவான் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனை ஏற்படக் கூடும். வேலையில் உங்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். குடும்பத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும்.

Rahu Transit in Aquarius, Zodiac Sign, Astrology

மீனம்:

ராகு பகவான் கும்பத்திற்கு சஞ்சாரம் செய்வது மீன ராசிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். தடை தாமதம் ஏற்படும். பல பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவிப்பீர்கள். நெருக்கடிகளை உங்களால் சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும்.

Latest Videos

click me!