கோடியாய் கோடியாய் கொட்டி கொடுக்க போகும் சுக்கிரன் - யாருக்கெல்லாம் ஜாக்பாட் தெரியுமா?

First Published | Nov 4, 2024, 3:46 PM IST

Sukran Peyarchi 2024 In Sagittarius: சுக்கிர பகவான் வரும் 7ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதன் மூலமாக இந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன் அமைய போகிறது என்று பார்க்கலாம்...

Venus Transit In Sagittarius, Sukran Peyarchi 2024 In Sagittarius

Sukran Peyarchi 2024 In Sagittarius: நவக்கிரகங்களில் உள்ள 9 கிரகங்களில் சுக்கிர பகவானும் ஒன்று. காதல், வசியத்திற்கு பெயர் பெற்ற கிரகம். மாதத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். அதன்படி சுக்கிரன் வரும் 7ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி ரிஷபம், சிம்மம் மற்றும் மகரம் ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

Venus Transit In Sagittarius

ரிஷபம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்:

ரிஷப ராசியினருக்கு 1 மற்றும் 6ஆவது வீட்டிற்கு அதிபதி சுக்கிர பகவான். வரும் 7ஆம் தேதி முதல் 8ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகும் சுக்கிர பகவானால் சொத்து, சுகம் சேரும். பங்குகள் மூலமாக உங்களது நிதி நிலை உயரும். அலுவலகத்தில் அழுத்தத்தின் காரணமாக கடினமாக உழைக்க வேண்டி வரும். தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வருமானம் அதிகரித்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பரிகாரம்: குரு பகவானுக்குரிய ஓம் குருவே நமஹ என்ற மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும்.

Tap to resize

Venus Transit In Sagittarius

சிம்மம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்:

சிம்ம ராசிக்கு சுக்கிர பகவான் 3ஆவது மற்றும் 10ஆவது வீட்டிற்கு அதிபதி. வரும் நவம்பர் 7ஆம் தேதி நிகழக் கூடிய சுக்கிரன் ரிஷபத்திற்கு 5ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்கு வாதம் ஏற்படக் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மனைவி மீது அன்பு அதிகரிக்கும். அவர்களால் ஈர்க்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையில் காதல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Venus Transit In Sagittarius

மகரம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்:

இந்த ராசியைப் பொறுத்த வரையில் சுக்கிரன் 5 மற்றும் 10ஆவது வீட்டிற்கு அதிபதி. வரும் 7ஆம் தேதி உங்களது 12ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலமாக வேலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். எப்போதும் டிராவல்யே இருப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணம் இழக்கும் நிலை உருவாகும். கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வர நன்மை உண்டாகும்.

Latest Videos

click me!