
Kadagam Rasi 2025 New Year Rasi Palan in Tamil: 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு சனி, குரு, ராகு மற்றும் கேது என்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையிலும் கடக ராசிக்கு 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க.
பொருளாதாரம்:
கடக ராசிக்கு 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பொருளாதாரத்தில் சிறப்பான ஆண்டாக இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சாதகமான சனி பகவான் சாதகமற்ற நிலைக்கு மாறுகிறார். இதே போன்று ராகுவின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கும். கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நிதி நிலையில் உங்களுக்கு சாதமாக இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். அதனை சுப செலவுகளாக மாற்றுவது நல்லது. கடன் வாங்கும் சூழல் ஏற்படும். கூடுமானவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தேவைக்கேற்ப மட்டும் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்துவது நல்லது.
ஹெல்த்:
2025 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் வரையில் சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படக் கூடும். மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சியாகும் நிலையில் அதன் பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் கூட குருவின் 12ஆம் இடத்து பெயர்ச்சியால் வயிறு, இடுப்பு, முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
2025 ஆங்கில புத்தாண்டு கடக ராசி – திருமண வாழ்க்கை:
திருமண வயதை எட்டிய ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். முதல் பகுதி நடக்கவில்லை என்றால் பிற்பகுதி தடை தாமதமாக இருக்கும். திருமண விஷயங்களில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. காதல் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
காதல் வாழ்க்கை:
2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பொறுத்த வரையில் கடக ராசியினருக்கு காதல் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சனியின் தாக்கத்தால் காதல் வாழ்க்கையில் சலசலப்பு இருந்திருக்கும். இனி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இது கடக ராசிக்கு காதல் வாழ்க்கையில் சாதகமான பலனை தரும். இந்த காலகட்டத்தில் உங்களது காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.
மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!
நிலம், வண்டி, வாகனம், கட்டிடம் வாங்கும் யோகம்:
2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கடக ராசிக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அமையும். நிலம், வீடு, கட்டிடம் வாங்கும் யோகம் உங்களை தேடி வரும். சனி மற்றும் குரு உங்களுக்கு சாதகமான இடங்களில் இருப்பதால் இந்த யோகங்கள் கிடைக்க பெறுவீர்கள்.
குடும்ப உறவு:
கடக ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் 2025 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு குடும்ப விஷங்களில் சாதகமற்ற பலனைத் தரும். சனியின் 2ஆம் இடத்து பார்வை பலன் குடும்ப உறவுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் பேசும் விதம் சற்று கடுமையாக இருக்கலாம். இது உங்களையும், உங்களது உறவுகளையும் பாதிக்கும். வருடத்தின் நடுப்பகுதியில் ராகு கேதுவின் தாக்கம் காரணமாக குடும்ப உறவுகளிடையே பிரிவை ஏற்படுத்தக் கூடும். பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
2025 ஆங்கில புத்தாண்டு கடக ராசி – தொழில்
தொழிலில் இருந்த கடந்த கால பிரச்சனைகளுக்கு இந்த ஆண்டு முடிவு கிடைக்கும். இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். இதற்காக கடினமாக உழைப்பீர்கள். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். குருவின் பெயர்ச்சி காரணமாக சக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக நடக்கலாம். வேலை மாற்றத்திற்கு ஏற்ற ஒரு ஆண்டாக இந்த வருடம் இருக்கும். எந்த சூழலையும் தைரியமாக கையாள உங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
கடக ராசிக்கு 2025 ஆங்கில புத்தாண்டு – வியாபாரம்:
கடக ராசியினருக்கு வியாபாரம் சிறப்பானதாக இருக்கும். கடந்த ஆண்டை விட சிறப்பான பலனை தரும். வியாபாரத்தை பொறுத்த வரையில் எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். அவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க கூடாது. மார்ச் மாதம் வரையில் வேலை மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் தென்படும். எனினும் தடை, தாமதம் இருக்காது. கடினமாக உழைக்க வேண்டி வரும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு தெரிந்த யாரேனும் விருச்சிக ராசியாக இருந்தால் அவர்களுக்கான பலன்: விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?
கடக ராசி 2025 ஆம் ஆண்டு கல்வி பலன்:
இந்த வருடம் கடக ராசிக்கு கல்வியைப் பொறுத்த வரையில் சிறப்பான ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்க்கும் இடங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் பிறகு குருவின் பெயர்ச்சி காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் கடினமாக படிக்க வேண்டும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். இதனால், மாணவர்களுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த ஆண்டு படிப்பில் சிறப்பான பலனைத் தரும்.
பரிகாரம்:
மஹான்கள், முனிவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
நாள்தோறும் நெற்றியில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு புதன் கிழமையும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
உங்களது வீட்டில் மனைவியோ, கணவனோ அல்லது வேறு யாரேனும் தனுசு ராசியா இருந்தால் அவர்களுக்கான பலன்: தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?