
Venus Transit 2025 Forms Raja Yoga Palan Tamil : சுக்கிரன் பெயர்ச்சியானது பெண்களுக்கு ராஜயோகத்தை கொண்டு வந்து தர போகிறது. அது நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, திருமண யோகத்தையும் உருவாக்கி தரும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது கும்ப ராசியில் டிராவல் பண்ணும் சுக்கிரன் வரும் 28ஆம் தேதி காலை 7.02 மணிக்கு மீன ராசிக்குள் நுழைவார். இந்த வருடம் சுக்கிரன் 10 முறை தனது ராசியை மாற்றுகிறார். தற்போது கும்பத்தில் இருக்கும் சுக்கிரன் யார் யாருக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
துலாம் ராசி பெண்கள்:
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெறுவதால், இந்த ராசி பெண்களுக்கும் உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள். தொழில் மற்றும் வேலையில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும்.
கும்பம் ராசி பெண்கள்:
கும்ப ராசி பெண்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தன ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், நிதி நிலை நாளுக்கு நாள் மேம்படும். பங்குச் சந்தை மற்றும் பிற பரிவர்த்தனைகளில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்கள் நடைபெறும். நிறுத்தி வைக்கப்பட்ட பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் சமரசம் மூலம் தீர்க்கப்படும். நல்ல குடும்பத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கன்னி ராசி பெண்கள்:
கன்னி ராசி பெண்களுக்கு உயர்ந்த குடும்பத்தில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார்கள். வாழ்க்கை முறையில் முழுமையான மாற்றம் ஏற்படும். மனதின் முக்கிய ஆசைகள் நிறைவேறும். வேலைக்குச் செல்பவர்களுடன், வேலையில்லாதவர்களுக்கும் வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
மகரம் ராசி பெண்கள்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 3ஆம் வீட்டில் உச்சம் பெறுவது மிகவும் சுபம். இந்த ராசி பெண்களுக்கு ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் தொழில் மற்றும் வேலைக்கு சாதகமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம். வருமானம் நன்றாக அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பெண்கள்:
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இந்த ராசி பெண்களுக்கு செல்வம் பெருக வாய்ப்புள்ளது. பல வழிகளில் வருமானம் அதிகரிக்கலாம். வேலை முயற்சிகளில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் அல்லது திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பது உறுதி. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்திற்கு பஞ்சமிருக்காது.
மிதுனம் ராசி பெண்கள்:
மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் இந்த ராசிக்கு அரிய 'மால்வ்ய மகாபுருஷ யோகம்' கிடைக்கும். எந்த துறையிலும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக முன்னேற்றம் அடைவார்கள். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு நிச்சயம். திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். நல்ல வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களின் கனவு நனவாகும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள் இருவருக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம்.