தனுசு ராசியில் புதன் – சும்மா விளையாட போகும் டாப் 4 ராசிக்காரங்க யார் யார் தெரியுமா?

Published : Jan 04, 2025, 06:47 AM IST

Mercury Transit in Sagittarius 2025 Palan in Tamil : சூரிய குடும்பத்தின் இளவரசரான புதன் பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியான நிலையில் எந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்…

PREV
15
தனுசு ராசியில் புதன் – சும்மா விளையாட போகும் டாப் 4 ராசிக்காரங்க யார் யார் தெரியுமா?
Mercury Transit 2025 Palan in Tamil

Mercury Transit in Sagittarius 2025 Palan Tamil : புதன் ராசி பலன் ஜனவரி 2025: ஜோதிடர்களின் கூற்றுப்படி, நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசி மாறுகிறது. புதனும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம். சந்திரனுக்கு அடுத்தபடியாக புதன் தான் வேகமாக ராசி மாறுகிறது. இந்த கிரகம் சுமார் 23 நாட்கள் ஒரு ராசியில் இருக்கும். நேற்று ஜனவரி 3ஆம் தேதி வரையில் விருச்சிக ராசியிலிருந்த புதன் பகவான் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தனுசு ராசிக்குள் நுழைகிறது. புதனின் இந்த ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த 4 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்…

25
Budhan Peyarchi Dhanusu Rasi 2025 Palan Tamil

மிதுனம் ராசிக்காரர்களுக்கு பண வரவு:

இந்த ராசியின் அதிபதி புதன் கிரகம். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறுத்தி வைக்கப்பட்ட அல்லது தடைபட்ட வேலைகள் இப்போது வேகமாக நடந்து முடிந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  குழந்தைகளுக்கு சிறப்பு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

35
Mercury Transit 2025 Palan Tamil, Budhan Peyarchi 2025 Palan Tamil

கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும்:

கன்னி ராசியின் அதிபதியும் புதன் தான். ஒரு பழைய நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். மன அமைதியை உணர்வீர்கள். அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலையை உரிய நேரத்தில் முடித்து கொடுத்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அண்டை வீட்டாருடன் நல்ல உறவு நீடிக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெரியவர்களின் அனுபவமும் அறிவுரையும் உங்களுக்கு உதவும்.

45
Mercury Transit 2025 Palan in Tamil, Mercury Transit in Sagittarius 2025 Palan Tamil

தனுசு ராசிக்காரர்கள் புதிய சொத்து வாங்குவார்கள்:

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். ஜனவரி 4ஆம் தேதியான இன்று விருச்சிக ராசியிலிருந்து புதன் தனுசு ராசியில் நுழைவார். கணவன் மற்றும் மனைவிக்கிடையிலான உறவு இனிமையாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு ஏற்படும். கணவன்-மனைவி ஒற்றுமையால் வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். சொத்துக்களை வாங்குவதாலும் விற்பதாலும் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

55
Mercury Transit 2025, Sagittarius, January 2025 Astrology

மீன ராசிக்காரர்களுக்கு கூடுதல் வருமானம்:

மீன ராசியின் அதிபதி குரு பகவான். உங்களுக்கு புதிய வருமான வழிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவனமாக இருப்பார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஆர்வம் இருக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மாமனார் வீட்டில் இருந்து உதவி கிடைப்பதால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories