2025ல் கூடவே இருந்து உங்களது முதுகில் குத்தக் கூடிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

Published : Jan 03, 2025, 06:54 PM IST

Top 4 Backstabbing Zodiac Signs : நண்பர்கள் போன்று பழகி பக்கத்திலேயே இருந்து கடைசியில் உங்களது முதுகில் இந்த ராசியினர் குத்திவிடுவார்களாம். அவர்கள் யார் யார் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

PREV
16
2025ல் கூடவே இருந்து உங்களது முதுகில் குத்தக் கூடிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
Top 4 backstabber zodiac sign

Top 4 Backstabbing Zodiac Signs : ஆபத்துக்கு உதவுபவர்களே உண்மையான நண்பர்கள் என்று சொல்வோம். ஆனால், கஷ்ட காலங்களில் உதவி செய்பவர்களைக் காட்டிலும் கெடுதல் நினைப்பவர்கள் தான் இன்றைய உலகத்தில் அதிகமாகிவிட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் உங்கள் கூடவே இருந்து கடைசியில் உங்களது முதுகில் குத்திவிடுவார்களாம். அப்படிப்பட்ட ராசிக்காரங்க யார் யார் என்று இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

26
5 Biggest Backstabber Zodiac Sign 2025

மேஷம் ராசி:

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்க கூடியவர்கள். இந்த ராசியினரை உங்களுக்கு அருகில் வைத்துக் கொண்டால் அவர்கள் உங்களது முதுகில் குத்திவிடுவார்களாம். மேஷ ராசியினருக்கு நீங்கள் தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அருகாமையில் வைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் உங்களை தூக்கி எறிந்துவிடுவார்கள். அடுத்த நிமிடமே வேறொருவரை நண்பராக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் தான் இந்த மேஷ ராசியினர்.

36
5 Backstabbing Zodiac Signs Most Likely To Betray

மிதுனம் ராசி:

பொதுவாக மிதுனம் ராசியினர் அமையாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் அடிக்கடி முகம் மாறக் கூடியவர்கள். சில நேரங்களில் இப்படியும் பேசுவார்கள், சில நேரங்களில் அப்படியும் பேசுவார்கள். உங்களிடமிருந்து அவர்களுக்கு என்ன தேவையோ அதை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை காது கொடுத்து கூட கேட்கமாட்டார்கள். நீங்கள் நல்லவர் என்று கூட பேசுவார்கள், நீங்கள் மோசமானவர் என்று கூட பேசுவார்கள்.

46
Backstabbers zodiac Signs

சிம்மம் ராசி:

இவர்கள் சந்தர்ப்பதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். உங்களுடன் இருப்பார்கள் உங்களுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்துக் கொண்டு அவர்கள் முன்னேறிவிடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு தேவை என்றால் கூடவே வைத்திருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு தேவை இல்லை என்று தெரிந்துவிட்டால் உங்கள் கூட பேசக் கூட மாட்டார்கள். நன்றியை கூட நினைத்து பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள்.

56
Zodiac Signs That Are Most Likely To Stab You In The Back,

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியினரை யாராலயும் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உடனே உங்களை தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள். அதோடு உங்களைப் பற்றி மற்றவர்களுடன் தவறாக பேசுவார்கள். உங்களை கொஞ்சம் கூட ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க.

66
Top 4 Backstabbing zodiac signs

மீனம் ராசி:

உங்கள் மூலம் வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நண்பர்கள் போன்று நடிப்பார்கள். ஆனால், உங்களால் உதவி இல்லை என்று தெரிந்துவிட்டால் உங்களது முதுகில் குத்தவும் தயங்கமாட்டார்கள். உங்களைப் போன்று வேறொருவர் கிடைத்துவிட்டால் அவர்களுடன் சென்றுவிடுவார்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories