Horoscope Today January 4 2025 Rasi Palan in Tamil
Horoscope Today January 4 2025 Rasi Palan : ஜனவரி 4, 2025 ராசிபலன்: ஜனவரி 4ஆம் தேதி சனிக்கிழமை இன்று 5 ராசிகளுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். வங்கி சேமிப்பில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம். மாதத்தின் 4ஆம் தேதியான இன்று ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ராசியினருக்கு எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
Rasi Palan, Sagittarius Daily Horoscope Today January 4 2025 Palan
ரிஷப ராசிக்கான இன்றைய நாள் எப்படி?
இந்த ராசிக்காரர்களுக்கு ஜனவரி 4, சனிக்கிழமை வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாத்தியமாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை முடிவடைவதால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தையின் சாதனையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன் தொடர்பான பணிகள் நிறைவேறும். உடல்நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
Horoscope Today January 4 2025 Rasi Palan
கடக ராசிக்கு இன்று நாள் எப்படி இருக்கும்?
இந்த ராசிக்காரர்கள் ஜனவரி 4, சனிக்கிழமை புதிய சொத்து வாங்கலாம். இதன் மூலமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெற்றோரின் உதவியுடன் அரசு திட்டங்களின் பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாமியார் வீட்டில் இருந்து பரிசு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரலாம். பெரிய இடத்து சம்பந்தம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
Daily Rasi Palan, Astrology, Horoscope
சிம்ம ராசிக்காரர்களுக்கு பாராட்டு கிடைக்கும்:
இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செயல்கள் மற்றும் நடத்தைக்காக பாராட்டப்படுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். திறமையால் புதிய வெற்றிகள் கிடைக்கும். வீடு மற்றும் தொழிலில் சரியான சமநிலை இருக்கும். மன அமைதி கிடைக்கும், மரியாதையும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேறும். காதல் வாழ்க்கைக்கு இனிமையானதாக இருக்கும்.
Today Horoscope, Rasi Palan, Astrology
தனுசு ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்:
இந்த ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திடீர் பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் போதுமான நேரம் ஒதுக்குவார்கள், இதனால் இருவரின் கோபமும் நீங்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
Indraya Rasi Palan, Jothidam, Astrology
கும்ப ராசிக்காரர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்:
இந்த ராசிக்காரர்களுக்கு அரசியல் அல்லது வேலையில் உயர் பதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஏதேனும் முக்கியமான வேலை முடிவடையும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமண உறவில் இனிமை அதிகரிக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.