வேத ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், மகிழ்ச்சி, கலை, காதல் மற்றும் ஆடம்பரத்திற்கு காரகராக விளங்குகிறார். சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஜோதிடத்தின் படி, செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமான சுக்கிரன் அக்டோபர் 9 ஆம் தேதி தனது பாதையை மாற்றுவார். சுக்கிரன் புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் நுழைவார். அக்டோபர் 9, காலை 10:38 மணிக்கு சுக்கிர பகவான் கன்னி ராசியில் நுழைய இருக்கிறார். சுக்கிரனுக்கும் புதனுக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாக, இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
24
கன்னி ராசி
கன்னி ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெற உள்ளனர். லக்ன வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்க உள்ளது. திடீர் பணவரவு ஏற்பட உள்ளது. எந்த ஒரு வேலையிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிறைய பலன்களைத் தரும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடின உழைப்பின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். தந்தை வழி உறவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படலாம்.
34
மிதுன ராசி
கன்னி ராசியில் சுக்கிரன் நுழையும் போது மிதுன ராசியின் நான்காவது வீட்டை சுக்கிரன் பார்வையிட இருக்கிறார். அதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பொன்னான காலம் தொடங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக வரும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள் நிறைவேறும். வீண் செலவுகள் குறையும். பயனில்லாமல் செய்த செலவுகள் குறைந்து, சுப செலவுகள் ஏற்படும். கல்வி மற்றும் காதல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சுக்கிரனின் கன்னி ராசி பெயர்ச்சியானது ரிஷப ராசிக்கு நன்மைகளை தரும். எந்த வேலையும் கவனத்துடன் செய்தால் சரியான வெற்றியை ஈட்டலாம். காதல் மற்றும் திருமண உறவுகளில் சுப செய்திகள் வந்து சேரலாம். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீங்கள் கடினமாக வேலை செய்தால் எளிதில் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கும் இந்த காலம் சாதகமானதாக அமையும் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.