திரி ஏகாதச யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களைத் தரும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். நிலுவையில் இருக்கும் வேலைகள் நிறைவடையும். இத்தனை நாட்களாக அடைக்க முடியாமல் இருந்த கடன்கள் தீரும். கடன்களை அடைப்பதால் மன அமைதி உண்டாகும். புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் அதை பெரிய அளவில் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)