Trigrahi Yog 2026: 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. சூரியன், புதன், சுக்கிரன் இணைவதால் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சிறப்புப் பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தின்படி, பிப்ரவரியில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற இருக்கின்றன. இது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். மேலும் பஞ்சமகா ராஜயோகங்களும் உருவாகும். அந்த வகையில் பிப்ரவரியில் கும்ப ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் இணைய இருக்கிறார்கள். இதனால் உருவாகும் திரிகிரக யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
27
மேஷம்
திரிகிரக யோகம் மேஷ ராசிக்கு சுப பலன்களைத் தரும். மேஷ ராசியினரின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வரும். வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்து வரும் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.
37
ரிஷபம்
இந்த கிரக சேர்க்கை ரிஷப ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். வேலையில் மரியாதை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல நேரம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
திரிகிரக யோகம் மிதுன ராசிக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய சொத்து வாங்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
57
கன்னி
கும்பத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை கன்னி ராசிக்கு திடீர் முன்னேற்றத்தை உருவாக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். எதிரிகளை வெல்வீர்கள். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகுவார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடித்து வெற்றியைக் குவிப்பீர்கள்.
67
தனுசு
திரிகிரக யோகம் தனுசு ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் அல்லது பிற தேவைகளுக்காக வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் நிதி உதவி கிடைக்கும். புனித யாத்திரை செல்லலாம். அரசு வேலைக்குத் தயாராகுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். நிதி ஆதாயம் உண்டாகும்.
77
கும்பம்
திரிகிரக யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த யோகம் உங்கள் லக்ன வீட்டில் உருவாவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)