This Week Rasi Palan: மீன ராசிக்கு இழந்த அனைத்தையும் மீட்டு எடுக்கும் யோகம்.! இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட்.!

Published : Jan 19, 2026, 04:46 PM IST

This Week Rasi Palan Meenam: ஜனவரி 19 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
கிரக நிலைகள்:

மீன ராசி நேயர்களே, இந்த வாரம் தனம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதியான செவ்வாய் பகவான் 11 வது வீடான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். இது இழந்த அனைத்தையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்கள் துலங்கும். சுப காரியங்கள் கைகூடும்.

பொதுவான பலன்கள்:

குரு பகவான் சாதகமான நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வேகம் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். சுப காரிய பேச்சுக்கள் வேகம் பெறும்.

நிதி நிலைமை:

தீராத கடனை தீர்ப்பதற்கான வழிகள் தென்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதே சமயம் சுப செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். திடீர் அதிர்ஷ்டம் அல்லது எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகளும் வர வாய்ப்பு இருப்பதால் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

வேலை மற்றும் தொழில்:

சிலருக்கு வேலையில் கவுரவமான பதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் இருக்கும் எதிரிகளின் தொல்லைகள் குறையும். மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

குடும்ப உறவுகள்:

தந்தை வழி உறவுகள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் உறவுகள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தையுடன் இருந்த விரிசல்கள் நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். காலநிலை மாற்றத்தால் சளி, உடல் சோர்வு ஆகியவை ஏற்பட்டு மறையும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. நடைப் பயிற்சி அல்லது யோகா செய்வது மன அமைதி தரும்.

மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்க்கவும். உயர்கல்வி பயில விரும்புபவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும். போட்டித் தேர்வில் ஈடுபடுபவர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை. எனவே முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். இருப்பினும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவுகளை மேற்கொள்வது நல்லது.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். சனிக்கிழமை அன்று இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நன்மைகளை இரட்டிப்பாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories