கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய வாரமாகும். 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். எனவே கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்துவது தேவையற்ற சங்கடங்களில் இருந்து விடுவிக்கும்.
பொதுவான பலன்கள்:
எடுத்த காரியத்தில் ஆரம்பத்தில் சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சல்கள் குறையும். மனதிற்குள் இருந்த இனம் புரியாத பயம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மன அமைதி தரும்.
நிதி நிலைமை:
சுப செலவுகளுக்காக கடன் பெற நேரிடலாம். தோட்டம், வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வழிகள் பிறக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சேமிக்க நினைத்தாலும் விரய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும்.
வேலை மற்றும் தொழில்:
வாழ்க்கைத் துணையின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் கனவுகள் நனவாகும். ஊர் மாற்றம், வேலை மாற்றம் நடைபெறலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பின் சக ஊழியர்களிடம் நிர்வாகம் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம்.
குடும்ப உறவுகள்:
பூர்வீக சொத்து தொடர்பாக நடந்து வரும் வழக்குகள் மேலும் தாமதமாகலாம். இருப்பினும் உங்கள் வாழ்க்கைத் துணையின் தாய் வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்கக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பழைய நோய்கள் தலை தூக்கக்கூடும். எனவே முறையான மருத்துவ பரிசோதனை அவசியம். கால் வலி அல்லது நரம்பு சம்பந்தமான உபாதைகள் மீண்டும் எழலாம். உணவு கட்டுப்பாடு, முறையான உறக்கம் அவசியம்.
கல்வி சார்ந்த விஷயங்களில் நிலவி வந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உயர்கல்வி கற்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே புதிய முயற்சிகளை தைரியமாக எடுக்கலாம். இருப்பினும் ஜனவரி 19 அன்று மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரிகாரங்கள்:
தை மாத பஞ்சமி திதியில் வராஹி அம்மனை வழிபடுவது நல்லது. திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் அர்ச்சித்து வழிபடலாம். ஏழை மாணவர்களுக்கு காலணிகள் தானமாக வழங்குவது அல்லது அன்னதானம் வழங்குவது சிறந்தது. ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)