தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் இரண்டாம் வீடான தனம், குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை உள்ளது.
தன ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் இந்த வாரம் பொருளாதார மேன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உருவாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். கடன்கள் தீரும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
பொதுவான பலன்கள்:
எடுக்கும் காரியங்களில் சிறு தடைகள் இருந்தாலும், வார இறுதியில் வெற்றி கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். நீண்ட தூர பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரித்தாலும், இறுதியில் ஆதாயம் கிடைக்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உருவாகும். அதே சமயம் சுப விரயங்கள் அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்களை பரம்பரையாக பயன்படுத்துவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்பதற்கான வழிகள் பிறக்கும். எதிர்பாராத பண வரவால் கடன் தொல்லைகள் விலகும்.
வேலை மற்றும் தொழில்:
தொழிலில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு வெளியூருக்கு வேலை மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணி செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். மேல் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். சுயதொழில் செய்து வருபவர்கள் இந்த வாரம் கணிசமான லாபத்தை எதிர்பார்க்கலாம்.
குடும்ப உறவுகள்:
வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள் மற்றும் விரயங்கள் இந்த வாரம் குறையும். குடும்பத்தினரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெண்களுக்கு கணவனால் ஆதாயம் உண்டு. மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கலாம். புதிய உறவுகள், நட்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
கண் மற்றும் தொண்டை தொடர்பான சிறு உபாதைகள் வந்து நீங்கும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். முதுகு அல்லது கால் வலி உள்ளவர்கள் அதிக அலைச்சல்களை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தமிழக அரசுப. பணி அல்லது மத்திய அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளை எழுதி முடித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் சுப முடிவுகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை. எனவே புதிய முயற்சிகளையும், முக்கிய முடிவுகளையும் தயக்கமின்றி எடுக்கலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனை அல்லது குடும்பத்தாரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இந்த மாதம் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் கன்னி தெய்வம் அல்லது குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. பெண் தெய்வங்களை வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)