துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கும். சுணங்கி கடந்த பணிகள் விறுவிறுப்படையும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடைகள், தாமதங்கள் நீங்கும். வராத கடன்கள் வசூலாகும். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டுவதற்கான வழிகள் பிறக்கும்.
பொதுவான பலன்கள்:
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த காரியங்களை இந்த வாரம் முடித்து வெற்றியைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் புகழ் மற்றும் கவுரவம் அதிகரிக்க கூடிய வாரமாக இருக்கும். குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக ராசியை பார்ப்பது பெரும் பலம் சேர்க்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இழந்த பணத்தை ஈடு கட்டுவதற்கான புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அடமானம் வைத்திருந்த நகைகள் மீண்டு வரும். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளை செய்வதற்கு முன்னர் நிதி நிலைமையை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
வேலை மற்றும் தொழில்:
தொழிலில் இந்த வாரம் சிறப்பான முன்னேற்றங்கள் காணப்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப்பளு குறையும். பத்திரிக்கை, எழுத்து, கணக்கு வழக்கு, கமிஷன், வங்கிப் பணிகள் மற்றும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரம் உயரும். புதிய வாடிக்கையாளர்களின் வரவால் லாபம் பெருகும். புதிய கிளைகள் தொடங்குவது அல்லது தொழிலை விரிவுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் கைகூடும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் திருமணம், புத்திர பாக்கியம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுப பலன்களும் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் தேடி வரும். உறவினர்களுடன் இந்த கசப்புணர்வுகள் நீங்கு சமூகமான சூழல் நிலவும். வீட்டில் சுப காரியத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தில் இதுவரை நிலவி வந்த கோளாறுகள் நீங்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அறுவை சிகிச்சை வரை சென்ற நோய்கள் கூட சாதாரண வைத்தியத்தில் குணமாகும். இருப்பினும் முதுகு வலி, கால் வலி, சோர்வு உள்ளிட்டவை ஏற்படலாம்.
மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடினமான பாடங்களையும் எளிதாக புரிந்து கொண்டு படிப்பீர்கள். உயர்கல்வி பயில விரும்புபவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் இல்லை. எனவே பயமின்றி புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இருப்பினும் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
பரிகாரங்கள்:
தை மாத வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும். மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது பொருளாதார வளர்ச்சியைத் தரும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது கர்ம வினைகளை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)