வேத ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் ஒரு வானியல் நிகழ்வாக மட்டும் கருதப்படுவதில்லை. இது ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளையும் பாதிக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேரும்போது, பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று பிப்ரவரி இறுதியில் உருவாக இருக்கிறது. இது ஜோதிடத்தில் ‘அங்காரக யோகம்’ எனப்படுகிறது.
பிப்ரவரி இறுதியில் செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்குள் நுழைகிறது. அங்கு ஏற்கனவே ராகு இருக்கிறார். செவ்வாய் மற்றும் ராகுவின் இந்த சேர்க்கை அசுபமானதாகக் கருதப்படுகிறது. இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு, மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. அங்கார யோகத்தால் பாதிப்புள்ளாகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.