நேருக்கு நேர் சந்திக்கும் எதிரி கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 19, 2026, 11:37 AM IST

Sun Saturn Conjunction in pisces 2026: பிப்ரவரி 2026 குரு பகவானின் சொந்த வீடான மீன ராசியில் எதிரி கிரகங்களான சூரியன் சனி சேர்க்கை நடக்கவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
சூரியன் சனி சேர்க்கை

ஜோதிடத்தின்படி, பிப்ரவரியில் சூரியனும் சனியும் மீன ராசியில் இணைகின்றனர். ஜோதிடத்தில் சூரியன்-சனி சேர்க்கை சிக்கலானதாகக் கருதப்படுகிறது. இருவரும் தந்தை-மகனாக இருந்தாலும், பரஸ்பர எதிரிகள் ஆவர். சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, ஆற்றல், தைரியம், தலைமைப்பண்பு ஆகியவற்றையும், சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கர்ம பலன்களையும் குறிக்கிறார். இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு கடின உழைப்பை அதிகரித்து, நீண்ட காலப் பலன்களை வழங்க இருக்கிறது. இந்தச் சேர்க்கையால் லாபம் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
ரிஷபம்

ரிஷப ராசியின் 11-ம் வீட்டில் (லாப ஸ்தானம்) சூரியன், சனி சேர்க்கை நிகழ்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் அதிகப் பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திடீரென திறக்கப்படும். தடைபட்டு நின்ற பணிகள் வேகம் பெறும். அலுவலகத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். மேலதிகாரிகள் உங்கள் செயல்திறனைப் பாராட்டுவார்கள். இருப்பினும், முதலீடுகளில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

35
மிதுனம்

மிதுன ராசிக்கு இந்த சேர்க்கை 10-ம் வீட்டில் (தொழில் ஸ்தானம்) நிகழ்கிறது. இக்காலத்தில் உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தொழில் ரீதியாகவும் அடுத்த சில மாதங்கள் சிறப்பாக இருக்கும். அரசு அல்லது பெரிய நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் வர வாய்ப்புள்ளது. நல்ல பதவிக்குச் செல்வீர்கள். ஆனால், தந்தை அல்லது மேலதிகாரிகளுடன் சிறு வாக்குவாதங்கள் வரலாம். எனவே, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

45
துலாம்

துலாம் ராசிக்கு இந்த சேர்க்கை 6-ம் வீட்டில் (சத்ரு, ருண, ரோக ஸ்தானம்) நிகழ்கிறது. இதனால் பல நன்மைகள் உண்டாகும். ஜோதிடத்தின்படி 6-ம் வீட்டில் சூரியன்-சனி சேர்க்கை வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆனால், யாருக்காவது கடன் கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும்.

55
தனுசு

தனுசு ராசிக்கு இந்த சேர்க்கை 4-ம் வீட்டில் (சுக ஸ்தானம்) நிகழ்கிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் சொத்துத் தகராறுகள் தீரும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த தகராறுகள் மற்றும் குழப்பங்கள் நீங்கி மன நிம்மதி ஏற்படும். தாய்வழி உறவினர்களிடமிருந்து லாபம் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories