Sun Transit 2026: ஒரே மாதத்தில் 3 முறை பெயர்ச்சியாகும் சூரியன்.! இந்த ராசிகளை லட்சாதிபதியாக்கப் போகிறாராம்.!

Published : Jan 18, 2026, 05:34 PM IST

Surya Peyarchi Palangal in Tamil: சூரிய பகவான் பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை மாற்றம் காண இருக்கிறார். சூரியனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றம் சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
சூரிய பெயர்ச்சி 2026

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் பிப்ரவரியில் 3 முறை தனது நிலையை மாற்ற இருக்கிறார். பிப்ரவரி 6 ஆம் தேதி அவிட்ட நட்சத்திரத்திலும், பிப்ரவரி 13ல் கும்ப ராசியிலும், பிப்ரவரி 19 ஆம் தேதி சதய நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். ஒரே மாதத்தில் சூரியன் 3 முறை தனது நிலையை மாற்றுவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.

24
மேஷம்

சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிதி வளம் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை வாழ்க்கை துணைவுயுடனான உறவு பலப்படும்.

34
சிம்மம்

சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். பிப்ரவரி மாதம் முதல் வருமானம் பெருகும். புதிய வருமான வழிகள் உருவாகும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு விரும்பிய பலன்களும், இடமாற்றம் கிடைத்த நல்ல செய்தியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

44
தனுசு

சூரியனின் இந்த சஞ்சாரம் தனுசு ராசிக்கு தைரியத்தை அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு, வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அரசுப் பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது. உங்கள் அனைத்து ஆசைகளும், கனவுகளும் நிறைவேறும். நிதி நெருக்கடியில் இருந்து வருபவர்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். பழைய கடன்கள் அடையும். கடின உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories