கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசியின் அதிபதியான புதன் பகவான் ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். முடிவெடுப்பதில் இருந்த குழப்பங்கள் விலகும். நினைத்த காரியங்களை சாதிப்பதற்கு இருந்த தடைகள் விலகும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாரமாக இருக்கும். குருவின் பார்வை இருப்பதால் தடைகள் நீங்கி சுப காரியங்கள் கை கூடும். நினைத்ததை சாதிப்பதற்கான மன தைரியம் கிடைக்கும். உங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்று லாபம் காண்பீர்கள். பெரிய அளவிலான பண பரிமாற்றங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது.
வேலை மற்றும் தொழில்:
உபயோகத்தில் இருப்பவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். அரசு சார்ந்த வேலைகள் சாதகமாக முடியும். அரசு பதவிகள், அரசு உத்தியோகம் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய ஆர்டர்கள் கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். சகோதரருடன் இணைந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தந்தை மற்றும் தாயின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
வயிறு உபாதைகள் அல்லது ஜீரண மண்டலக் கோளாறுகள் வரலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். வெளி உணவுகளை தவிர்த்து விடவும். வயதானவர்கள் மூட்டு வலி மற்றும் ரத்த அழுத்தத்தைக் கவனிப்பது நல்லது.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஞாபக மறதி அதிகமாக வாய்ப்பிருந்தால் இருப்பதால் எழுதி படிப்பது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் சந்திராஷ்டம நாட்கள் இல்லை. இருப்பினும் ஜனவரி 20 முதல் 22 வரை மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்த்தல், வாகனங்களை ஓட்டும்பொழுது அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
பரிகாரங்கள்:
ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்து, வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது புண்ணிய பலன்களை அதிகரிக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)