Weekly Rasi Palan: ஜனவரி 18 முதல் கடக ராசிக்கு தொடங்கும் நல்ல காலம்.! இனி எல்லாமே வெற்றி தான்.!

Published : Jan 18, 2026, 04:15 PM IST

This Week Rasi Palan Kadagam: ஜனவரி 18 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
கிரக நிலைகள்:

கடக ராசி நேயர்களே, இந்த வாரம் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வை கடக ராசியின் மீது விழுகிறது. இதன் காரணமாக நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனதில் நினைத்த காரியங்களை அடுத்த நிமிடமே நிறைவேற்றி முடிப்பீர்கள். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்புகள் உண்டு.

பொதுவான பலன்கள்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரம்பத்தில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை இருப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். சனி பகவானின் சாதகமற்ற நிலை காரணமாக எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஒருவித இனம் புரியாத பயம் வந்து நீங்கும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் கொடுத்த கடன் திருப்பி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணப்பழக்கம் சீராக இருக்கும். நிலுவையில் இருந்த தொகை கைக்கு வரும். பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.

வேலை மற்றும் தொழில்:

வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். லாபம் பெருகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதன் காரணமாக வேலைப்பளு குறையும். மனதில் இருந்த பாரங்கள் நீங்கும். தம்பதிகள் இணைந்து கூட்டாக தொழில் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

குடும்ப உறவுகள்:

தந்தை மகள் இடையே இருந்த உறவு வலுப்பெறும். மாமனார் மற்றும் சகோதரர் வழி மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். திருமணம், குழந்தை, வீடு வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்காக விரயங்கள் ஏற்படலாம்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

சனி பகவானின் நிலை காரணமாக கால் வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாகும். போடடித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

21-01-2026 அன்று நள்ளிரவு 01:35 முதல் 23-01-2026 அன்று காலை 8:33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கக்கூடும். தூக்கமின்மை ஏற்படலாம்.

பரிகாரங்கள்:

தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது. ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு கறுப்பு கருப்பு உளுந்து அல்லது அன்னதானம் செய்வது சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories