சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான சூரிய பகவான் ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக எதிரிகளை வெல்லும் ஆற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும் வாரமாக இருக்கும். சூரிய பகவானின் நிலையால் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறிச் செல்வீர்கள்.
பொதுவான பலன்கள்:
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் இந்த வாரம் முடிவுக்கு வரும். உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். துணிச்சலான முடிவுகளால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள். திட்டமிட்ட பயணங்களில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம்.
நிதி நிலைமை:
இந்த வாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதே சமயம் சுப செலவுகளும் தேடி வரும். சொத்துக்களை வாங்கும் அளவிற்கு நிதிநிலைமை மேம்படும். அரசு வழியில் எதிர்பாராத சில சலுகைகள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத நிதி வரவுக்கும் வாய்ப்புகள் உண்டு. வாகனங்களை எக்சேஞ்ச் ஆஃபரில் மாற்றுவீர்கள்.
வேலை மற்றும் தொழில்:
பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். வேலையில் உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல காலமாகும். வேலையில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான அறிகுறிகள் உண்டு.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உறவினர்களின் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
அடிவயிறு தொடர்பான உபாதைகள் வரக்கூடும் கை, கால், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் தலை தூக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்கவும். குறிப்பாக தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவைப்படலாம்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். ஞாபக மறதி அல்லது கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக படிக்கவும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
23-01;2026 அன்று காலை 8:33 மணிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். சிலருக்கு கடன் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
பரிகாரங்கள்:
பறவைகளுக்கு தானியங்களை இரையிடுவது துன்பங்களை விலக்க உதவும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும். ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை அல்லது வெல்லம் கலந்த உணவை ஏழைகளுக்கு வழங்கவும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வது துன்பங்களை விலக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)