ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது, பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். அப்படி ஒரு யோகம் தான் மகர ராசியில் உருவாகிறது. ஜனவரி 17 முதல் 19 வரை மகரத்தில் 5 கிரகங்கள் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது.
பஞ்சகிரகம் யோகம் எப்போது உருவாகிறது?
மகர ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஏற்கனவே பயணித்து வருகின்றன. ஜனவரி 17-ல் புதனும், ஜனவரி 18-ல் சந்திரனும் மகர ராசிக்குள் நுழைவார்கள். இதனால் மகரத்தில் 5 கிரகங்கள் ஒன்றாக சேரும். இந்த நிலை ஜனவரி 21 வரை நீடிக்கும். இதன் காரணமாக உருவாகும் பஞ்சகிரக யோகம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை வழங்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.