விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். செவ்வாய் பகவானின் நிலை உங்களுக்கு தைரியத்தை வழங்கும். குரு பகவானின் பார்வை சாதகமான இடத்தில் விழுவதால் சுப நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் உண்டு. அர்த்தாஷ்டம சனி தொடர்வதால் வேலைப்பளு அதிகரிக்கலாம்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் எடுத்த காரியத்தை முடிப்பதில் பிடிவாதமாக இருந்து வெற்றிகளை காண்பீர்கள். எண்ணத்தில் தெளிவு உண்டாகும். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இலக்குகளை அடைவீர்கள். நீண்ட நாட்களாக நகராமல் இருந்த வேலைகள் நகரத் தொடங்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தலாம் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. வாரத்தின் பிற்பகுதியில் சுபமான நிகழ்வுகள் நடைபெறும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பண வரவுக்கு எந்த குறைவும் இருக்காது. பணப்புழக்கம் சீராக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கலாம். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசனை பெறுவது அவசியம். குறிப்பாக நிலம் வாங்குபவர்கள், அசையா சொத்துக்கள் வாங்குபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.
வேலை மற்றும் தொழில்:
அலுவலகத்தில் உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் திறமையை கண்டு பதவி உயர்வுகள் கிடைக்கும்.ஊதிய உயர்வுக்கான பேச்சுக்கள் ஆரம்பம் ஆகும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை காண முடியும். சுயமாக தொழில் செய்பவர்கள் உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலமாகும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் குடும்ப உறவுகளில் நல்ல மாற்றம் காணப்படும். மாமனாரால் ஏற்பட்ட மன சங்கடங்கள் தீரும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். முறையாக சாப்பிட்டு, நேரத்திற்கு உறங்கி சந்தோஷமாக இருப்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். எந்த பதிலும் வராமல் இருந்த வரனிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கலாம். மறுமணம் தொடர்பான முயற்சிகள் நிறைவேறும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் தொடங்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கண் எரிச்சல் அல்லது சிறுநீர் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். நினைவாற்றல் அதிகரித்தாலும், கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிகாலை எழுந்து படிப்பது நல்லது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் இல்லை. இருப்பினும் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் பொழுது வேகம் வேண்டாம். முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது.
பரிகாரங்கள்:
திருமணம் ஆகாத பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்குவது நல்லது. தை மாத செவ்வாய்க்கிழமைகளில் சுமங்கலி பெண்களிடம் ஆசிப் பெறவும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடவும். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)