மகர ராசி நேயர்களே, இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாகும். அஷ்டம ஸ்தானத்தின் அதிபதி சுக்கிர பகவான் ராசியில் இருப்பதால் தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கலாம். திடீர் வேலை மாற்றங்கள் நிகழலாம். இதன் காரணமாக வேலைப்பளு மற்றும் மன உளைச்சல் அதிகமாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பிறருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
பொதுவான பலன்கள்:
வாரத்தின் தொடக்கத்தில் நிலவும் சில தடைகள் வார இறுதியில் விலகும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உங்கள் நற்பெயரைக் காக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
நிதி நிலைமை:
தொழிலில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் கணிசமான பண வரவு இருக்கும். சொத்து வாங்கும் முயற்சிகள் கைகூடும். சிலருக்கு வீடு அல்லது வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவேற்கும் மீறிய செலவும் இருக்கும்.
வேலை மற்றும் தொழில்:
தொழில் நிமித்தமாக சிலருக்கு ஊர் மாற்றம் அல்லது இடமாற்றம் செய்ய நேரலாம். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு இருந்த தடைகள் நீங்கும். குறுக்கு வழியில் பணம் ஈட்ட முயற்சிப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். பிறரின் வேலைகளை தாமாக முன் வந்து செய்வதை தவிர்க்கவும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும். உறவுகளிடம் கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். குழந்தைகளின் கல்வி அல்லது வேலை நிமித்தமாக நல்ல செய்திகள் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
கண் அல்லது பாதங்களில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீர்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளவும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் ஈடுபடுபவர்கள் கூடுதல் கவனம் தேவை. மறதி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எழுதி படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிபாட்டுதல் பக்கபலமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். இருப்பினும் அனுபமிக்கவர்கள் அல்லது பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.
பரிகாரங்கள்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்க உதவும். ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு வேலைக்கான உணவு ஏற்பாடு செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)