100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! 5 ராசிகளின் தலையெழுத்து மாறப்போகுது.!

Published : Feb 12, 2026, 02:18 PM IST

Trigrahi Yog 2026 Lucky Zodiac Signs: சூரியன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். ராகுவும், சுக்கிரனும் ஏற்கனவே இந்த ராசியில் சஞ்சரித்து வருகின்றனர். இந்த கிரகங்களின் சேர்க்கை சில ராசிகளின் வாழ்க்கையை மாற்றப் போகிறது. 

PREV
16
Trigrahi Yog 2026

ஜோதிடத்தின்படி, பிப்ரவரியில் பல முக்கிய கிரகங்கள் கும்ப ராசியில் சேர உள்ளன. ஏற்கனவே ராகு, சுக்கிரன், புதன் உள்ளனர். பிப்ரவரி 13ல் சூரியனும் கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த சமயத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்தி வாய்ந்த யோகங்களை உருவாக்கும். குறிப்பாக ராகு, சுக்கிரன், சூரியன் மூவரும் இணைந்து திரி கிரக யோகத்தை உருவாக்குகின்றன இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் தொழில் முன்னேற்றம் கிடைக்கும் அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
மிதுனம்

மிதுன ராசிக்கு பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்வில் மகிழ்ச்சி நிறையும் காலம் உருவாகப் போகிறது. வாழ்க்கையில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியிடத்தில் இருந்த அழுத்தங்கள் குறையும். கடின உழைப்புக்கான வெகுமதி கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

36
கடகம்

கடக ராசிக்கு திரிகிரக யோகம் நல்ல பலன்களைத் தரும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தெளிவு பிறக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். நிதி நிலை வலுப்பெறும். இந்த சுப யோகத்தின் செல்வாக்கால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நிதி நிலைமை வலுவாக மாறும். வருமானம் பெரிதும் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள்.

46
கன்னி

கன்னி ராசிக்கு திரிகிரக யோகம் சுப பலன்களை வாரி வழங்க இருக்கிறது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். புதிய வாய்ப்புகளால் வாழ்க்கை முற்றிலுமாக மாறும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பிரிந்து வாழ்ந்து வருபவர்கள் மீண்டும் ஒன்றாக இணைவீர்கள். நிதி ரீதியாக நல்ல இடத்தை அடைவீர்கள். புதிய கார், வாகனம் வாங்கும் யோகம் கைகூடும்.

56
தனுசு

சூரியன் ராகு சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கும். புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகம் செய்து வருபவர்கள் அதிக வெற்றிகளைப் பெற வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.

66
மீனம்

திரிகிரக யோகத்தால் மீன ராசிக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். அதிக பணம், செல்வம் சேரும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லிணக்கம் ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் தாமாக விலகிச் செல்வார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உறவுகள் வலுவடையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories