Trigrahi Yog 2026 Lucky Zodiac Signs : விரைவில் சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். அங்கு ஏற்கனவே இரு சுப கிரகங்கள் இருப்பதால் திரிகிரக யோகம் உருவாக இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரிய பகவான் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் அவர், மார்ச் 15 ஆம் தேதி குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைய இருக்கிறார். மீன ராசியில் ஏற்கனவே சுக்கிரன் மற்றும் சனி பகவான் பயணித்து வருகின்றனர். இவர்கள் இருவருடன் சூரியனும் இணைவதால் திரிகிரக யோகமும், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவதால் சுக்ராதித்ய யோகமும் உருவாக இருக்கிறது.
26
திரிகிரக யோகம் எப்போது உருவாகிறது?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 15ஆம் தேதி அதிகாலை 1:08 மணிக்கு சூரியன் மீன ராசியில் நுழைந்து ஏப்ரல் 14, 2026 வரை அங்கே இருப்பார். மீன ராசி சூரியனுக்கு நட்பு ராசியாக கருதப்படுகிறது. மேலும் மீன ராசியில் திரிகிரக யோகம், சுக்ராதித்ய யோகம் போன்ற சுபயோகங்கள் உருவாக இருக்கிறது. இது மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
36
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் திரிகிரக யோகம் நிகழ்கிறது. இதன் காரணமாக எதிர்பாராத பண வரவு உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். வேலையில் புதிய பொறுப்புக்கள் தேடி வரும்.
உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசியின் மூன்றாம் வீட்டில் அதிபதியாக விளங்கும் சூரியன் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் தொழில் ரீதியான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.
வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் பன்மடங்காக பெருகும்.
56
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் நுழைய இருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் குரு சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதன் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் செல்வம், பணவரவு, சொத்துக்களைப் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும்.
மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி பயில விரும்புபவர்களின் கனவு நனவாகும். மாணவர்கள் கடின உழைப்பின் பலன்களை அறுவடை செய்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
66
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் பல வழிகளில் நன்மை தருவதாக அமையும். சூரியன் நான்காவது வீட்டில் திரிகிரக யோகத்தை உருவாக்கும். தனுசு ராசியின் அதிர்ஷ்ட வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் இருப்பதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். வீட்டில் தடைபட்ட நின்ற சுப காரியங்கள் மீண்டும் துவங்கும். தாய் வழி உறவுகளுடன் சமூகமான உறவு ஏற்படும். நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகலாம். பொன், பொருள், வசதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)