Trigrahi Rajyog 2025: வேத நாட்காட்டியின்படி விருச்சிக ராசியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரிகிரக யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது. நவம்பர் மாதம் பல கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்ற இருக்கின்றன. அந்த வகையில் விருச்சிக ராசியில் திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய், செல்வத்தை அளிக்கும் சித்திர சுக்கிரன், கிரகங்களின் ராஜாவான சூரியன் ஆகியோர் நவம்பரில் விருச்சிக ராசியில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
விருச்சிகம்
திரிகிரக யோகம் உருவாகும் பொழுது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கலாம். இந்த யோகம் உங்கள் ராசியின் முதல் வீடான லக்ன வீட்டில் உருவாகிறது.
சூரிய பகவான் உங்களுக்கு தைரியம், வீரம், ஆற்றல் ஆகியவற்றை அளிப்பார். உங்களின் மரியாதை, கௌரவம், சமூக அந்தஸ்து ஆகியவை கிடைக்கும்.
ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் புதிய வேலை, புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
செவ்வாய் பகவான் உங்கள் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவார். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல நிதி லாபங்களைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
34
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் நன்மைகளை வழங்கும். இந்த யோகம் உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகிறது.
எனவே இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதால் வங்கி இருப்பு விறுவிறுவென உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் தடைபட்ட ஒப்பந்தங்கள் திடீரென உறுதி செய்யப்படும்.
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மிகப்பெரிய அரசு ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கைக்கு கிடைக்கலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த யோகம் உங்கள் ஜாதகத்தின் 9-வது வீட்டில் உருவாக இருக்கிறது.
ஒன்பதாவது வீடு தர்மம், அதிர்ஷ்டம், கல்வி, ஆன்மீகம், நீண்ட தூர பயணம் மற்றும் தந்தை வழி உறவுகளை குறிக்கிறது.
எனவே இந்த நேரம் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடியக்கூடும். வீட்டில் அல்லது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.
வேலை அல்லது வணிகத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவார்கள்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அதை சரியான முறையில் பயன்படுத்தி நிதி நிலைமையை மேம்படுத்துவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)