Astrology: இந்த 4 ராசிகளுக்கு இரண்டு முகம் உண்டு.! மாத்தி மாத்தி பேசுவாங்களாம்.! இவங்கள நம்பவே கூடாது.!

Published : Oct 28, 2025, 12:45 PM IST

Zodiac signs with two faces: ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இரட்டை முகம் அல்லது இரு வேறுபட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
இரண்டு முகம் கொண்ட 4 ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பண்புகள், ஆளுமைத் திறன்கள், குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில் குறிப்பிட்ட நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு இரட்டை முகம் இருக்குமாம். அதாவது இரட்டை முகம் என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடிய அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை குறிக்கிறது. இது பெரும்பாலும் குழப்பமான அல்லது முரண்பாடான தோற்றத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். குறிப்பிட்ட நான்கு ராசியை சேர்ந்தவர்கள் இரட்டை குணம் அல்லது இரட்டை முகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மிதுனம்
  • மிதுன ராசியின் சின்னம் இரட்டையர்கள் ஆகும். இவர்கள் இயற்கையாகவே இரண்டு ஆளுமைகளைக் கொண்டவர்கள். இரட்டை குணம் கொண்டவர்கள் பட்டியலில் மிதுன ராசி முதன்மையாக உள்ளது. 
  • இவர்கள் மிகவும் புத்திசாலிகள், நகைச்சுவைத் திறன் கொண்டவர்கள் மற்றும் பேசும் திறமை மிக்கவர்கள். ஒரு நொடியில் மிகவும் சுறுசுறுப்பாகவும், வெளிப்படையாகவும் இருப்பார்கள். அடுத்த நொடியே அமைதியாக உள்நோக்கி சிந்திப்பவர்களாக இருப்பார்கள். 
  • இவர்களின் இரட்டைத் தன்மை ஒரு விஷயத்தின் இரு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க உதவுகிறது. இதன் காரணமாக சிறந்த தொடர்பாளர்களாகவும், பல விஷயங்களை ஒரே சமயத்தில் கையாள்பவர்களாகவும் இருக்கின்றனர். 
  • இருப்பினும் இவர்களின் இந்த விரைவான மாற்றம் மற்றவர்களுக்கு உறுதியற்றவர்களாகவும், நம்பகத்தன்மையற்றவர்களாகவும் காட்சி தருகிறது.
35
மீனம்
  • மீன ராசியின் சின்னம் எதிரெதிர் திசையில் நீந்தும் இரண்டு மீன்களை குறிக்கிறது. இது இவர்களுக்குள் ஒரு விதமான இழுபறி இருந்து கொண்டே இருப்பதை குறிக்கிறது. 
  • இவர்கள் ஒருபுறம் மிகுந்த இரக்க உணர்வு கொண்டவர்கள், கற்பனைவாதிகள், கனவுலகில் வாழ்பவர்களாக உள்ளனர். மறுபுறம் எதார்த்தமான உலகத்தின் கவலைகளையும், உணர்ச்சிகளை சுமக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். 
  • இவர்கள் பெரும்பாலும் எதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் அலைபவர்களாக இருப்பதால் சில சமங்களில் குழப்பமான முடிவுகளை எடுப்பார்கள் அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது உணர்வுகளை மாற்றிக் கொள்வார்கள். 
  • இவர்களுடைய இந்த குணம் ஒரு பச்சோந்தி போல சூழலுக்கு ஏற்ப மாறுவதாக சிலரால் பார்க்கப்படுகிறது.
45
துலாம்
  • துலாம் ராசியின் சின்னம் தராசு என்பதால் இவர்கள் எப்போதும் சமநிலை மற்றும் நீதியை தேடுகிறார்கள். 
  • இவர்கள் சமநிலையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி இவர்களின் இரட்டைத் தன்மைக்கு வழிவகுக்கிறது. சண்டைகளை தவிர்ப்பதற்காகவும், அனைவரையும் மகிழ்விப்பதற்காகவும் இவர்கள் தங்கள் உண்மையான எண்ணங்களை மறைத்து வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறு விதமாக காட்டிக் கொள்கின்றனர். 
  • நீதியை நிலைநாட்ட தீவிரமாக வாதாடும் அதே சமயத்தில், ஒரு முடிவை எடுப்பதற்கு முடியாமல் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தின் அனைத்து பக்கங்களையும் எடை போட விரும்புவார்கள். 
  • இதனால் மற்றவர்கள் இவர்களை உறுதியற்றவர்கள் அல்லது இரட்டை வேடம் போடுபவர்கள் என்று தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
55
தனுசு
  • தனுசு ராசியின் சின்னமான வில்லாளி சின்னம் பாதி மிருகம் (குதிரை) பாதி மனிதன் என்கிற இரட்டைத்தன்மையை குறிக்கிறது. 
  • இவர்களின் குதிரை பகுதி சாகசம், சுதந்திரம், கட்டுப்பாடு இல்லாத தன்மையை குறிக்கிறது. மனிதப் பகுதி ஆழமான தத்துவம், ஞானம், உண்மையான அறிவுத் தேடலை குறிக்கிறது. 
  • இவர்கள் ஒருபுறம் தீவிரமான அறிவுத் தேடலில் ஈடுபடும், அதே சமயம் மறுபுறம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற வாழ்க்கையை விரும்புவார்கள். 
  • இவர்கள் ஒரு விஷயத்தை நேர்மையாக வெளிப்படையாக பேசும் பொழுது, அடுத்த நிமிடமே உணர்ச்சிவசப்பட்டு முரட்டு குணமாக நடந்து கொள்வார்கள். 
  • இது மற்றவர்களுக்கு இவர்களை கணிக்க முடியாதவர்களாக காட்டலாம்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories