Budhan Vakra Peyarchi Rasi Palangal: புதன் பகவான் துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணிக்க இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களும், அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் புதன் பகவான் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். அவர் படிப்பு, பேச்சு, பகுத்தறிவு, வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவரின் இயக்கம் மாறும்போதெல்லாம் அது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி முதல் புதன் வக்ர நிலையில் அதாவது பின்னோக்கிய நிலையில் பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பயணம் சாதகமாக இருக்கலாம். உங்கள் ராசியில் இருந்து 11-வது வீட்டில் புதன் வக்ரமாக இருப்பார். 11-வது வீடு என்பது லாப ஸ்தானமாகும். எனவே நீங்கள் புதிய வேலை அல்லது தொழிலை தொடங்க விரும்பினால் நன்மை கிடைக்கும். வருமானத்தில் கணிசமான அதிகரிப்பை காண்பீர்கள். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் இருந்து பயனடைவீர்கள். பண வரவு பன்மடங்காக அதிகரிக்கும். உங்கள் செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் முடிவடையும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
34
கடகம்
புதனின் வக்ர பயணம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். கடக ராசியின் நான்காவது வீட்டில் புதன் வக்ரமடைய இருக்கிறார். இதன் காரணமாக நீங்கள் ஆடம்பரங்களையும், சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். இந்த நேரத்தில் ஏராளமான வசதிகள், பொன், பொருள் கிடைக்கலாம். புதிய வாகனம் அல்லது சொத்துக்களையும் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் பலன்கள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம். உங்கள் மாமனார் மற்றும் மாமியார் வழி மூலம் நிதி ஆதாயம் கிடைக்கலாம்.
புதனின் வக்ர பயணம் கன்னி ராசியின் செல்வம் மற்றும் பேச்சுக்கு உரிய வீட்டில் நடைபெற இருக்கிறது. கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவான் இந்த காலக்கட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை அளிப்பார். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சும், செல்வாக்கு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை உயரும். பெரிய திட்டம் அல்லது சவாலான காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சந்தைப்படுத்துதல், கல்வி, வங்கி, பேச்சுத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)