வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிறர் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறன. இந்த யோகங்கள் நேர்மறை பலன்களை மட்டுமல்லாது, எதிர்மறை பலன்களையும் வழங்குகின்றன.
அந்த வகையில் மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகமானது ஐந்து ராசிக்காரர்களுக்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மகர ராசியில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சவால்களை சந்திக்க இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.