Astrology: குரு பகவானை சந்திக்கும் சந்திரன்.! அக்.12 முதல் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.!

Published : Oct 12, 2025, 10:39 AM IST

Gajakesari rajyog: அக்டோபர் 12 ஆம் தேதி அதிகாலை 2:24 மணிக்கு சந்திரன் ரிஷப ராசியை விட்டு வெளியேறி மிதுன ராசிக்குள் நுழைகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே குருபகவான் இருக்கும் நிலையில், இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

PREV
14
lord guru chandran

ஜோதிடத்தின்படி நவ கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் அக்டோபர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவான் இருவரும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். 

இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
மிதுனம்
  • மிதுன ராசியின் லக்ன வீட்டில் இந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது. 
  • இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் பல நன்மைகளை அடைய உள்ளனர். மி
  • துன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ உள்ளது. 
  • குழந்தைகளின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • மனக்கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெரும் மூச்சு விடுவீர்கள். வேலையில் இருந்து சிக்கல்கள் நீங்கும். 
  • எதிர்கால சேமிப்புக்கான திட்டங்களை செய்வீர்கள். 
  • எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வீர்கள். 
  • குடும்பத்தினரின் தேவையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். 
  • முடிவெடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும். 
  • புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
34
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் மிகுந்த பலன்களைத் தரும். 
  • துலாம் ராசியின் 9-வது வீட்டில் குரு சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. 
  • ஜாதகத்தில் 9வது வீடு தர்மம், அதிர்ஷ்டம், ஆன்மீகம், உயர்கல்வி, நீண்ட தூர பயணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 
  • எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். 
  • வேலையில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். 
  • உங்கள் மன சமநிலை மேம்படும். வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றிகளைக் குவிப்பீர்கள். 
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். 
  • சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். 
  • புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். 
  • நிதி ரீதியாக அடுத்த சில நாட்கள் சிறப்பாக இருக்கும். 
  • ஒவ்வொரு சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவீர்கள்.
44
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. 
  • தனுசு ராசியின் 7வது வீட்டில் குரு - சந்திரன் சேர்க்கை நடைபெற உள்ளது. 
  • ஜாதகத்தில் 7வது வீடு என்பது திருமணம், உறவுகள், கூட்டாண்மைகள் மற்றும் சட்ட ஒப்பந்தங்களை குறிக்கிறது. 
  • எனவே கஜகேசரி ராஜயோகத்தால் அரசாங்க வேலைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். 
  • புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். 
  • வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். 
  • வணிகரீதியான பயணங்கள் வெற்றியைத் தரும். 
  • தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். 
  • திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories