Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் சனி-சுக்கிரன்.! சம சப்தம யோகத்தால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.!

Published : Oct 12, 2025, 11:44 AM IST

Samasapthama yog: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து சமசப்தம ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் கைகளில் பணம் குவியப் போகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
சமசப்தம யோகம்

வேத ஜோதிடத்தின்படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் அக்டோபர் 11 ஆம் தேதி சனி மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து சமசப்தம யோகத்தை உருவாக்குகின்றனர். 

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த யோகம் காரணமாக மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மகரம்
  • மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகம் பல வழிகளில் நன்மைகளைத் தரும். 
  • இந்த யோகத்தால் உங்களின் ஆற்றல், தைரியம், வீரம் அதிகரிக்கும். 
  • உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பு
  • திய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 
  • ஏற்கனவே வணிகம் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 
  • நிதி நிலைமை வலுப்பெறும். 
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளுக்கான வாய்ப்பு உண்டு. 
  • இந்தக் காலக்கட்டத்தில் புதிய வீடு, புதிய வாகனம், சொத்துக்கள் அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். 
  • பணியிடத்தில் கொடுக்கப்படும் வேலையை வெற்றிகரமாக முடித்து முன்னேறிச் செல்வீர்கள்.
34
மிதுனம்
  • சமசப்தம யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்க இருக்கிறது. 
  • உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 
  • நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். 
  • வேலை மாற்றம் விரும்பியவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். 
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். 
  • கடின உழைப்பும், திறமையும் பாராட்டப்படும். 
  • அரசு வேலைகள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். 
  • சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்களுக்கு வணிகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
44
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகம் சாதகமாக இருக்கும். 
  • இந்த காலத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். 
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்படலாம். 
  • கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். 
  • புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்து நிதி லாபங்கள் கிடைக்கும். 
  • இதுவரை சந்தித்து வந்த உடல் நலக்கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். 
  • அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு தலைமைத்துவ வாய்ப்புகள் கிடைக்கும். 
  • வெளிநாட்டு பயணம் அல்லது வெளிநாடு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். 
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய 
  • வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories