கடக ராசிக்காரர்களுக்கு புதன் குரு இணைவு காரணமாக தொழில்துறையில் மகத்தான வெற்றிகள் கிடைக்க இருக்கிறது. உங்களின் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இந்த காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். சவாலான சூழ்நிலைகளையும் எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமான காலத்திலிருந்து விடுபட்டு, சரியான பாதையை தேர்வு செய்வீர்கள். கல்வி, எழுத்து, மேலாண்மைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைவீர்கள். போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணலுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலகட்டம் நேர்மறையான பலன்களைத் தரும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் சுபமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.