Diwali 2025 : உங்க வீட்டுக்கு பணத்தை அள்ளித் தரும் விசேஷ தீபம்! தீபாவளிக்கு தீபம் ஏத்துறப்ப இதை செய்ய மறக்காதீங்க!

Published : Oct 15, 2025, 02:34 PM IST

தீபாவளி பண்டிகை அன்று எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என இங்கு காணலாம்.

PREV
16

தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீமைகள் ஒழிந்து நன்மைகள் பிறக்கும் நாளே தீபாவளி. இந்த நாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் பெருகும். வாழ்வில் இருளை நீக்கவும், செல்வம் பெருகவும் மண் அகல் விளக்குகளை மக்கள் ஏற்றுவார்கள். இதுவே பாரம்பரியமாகும்.

26

மண் விளக்கில் உள்ள சுடர் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் என்பது காலம் கடந்த நம்பிக்கையாகும். தீபத்தின் சுடர் மகாலட்சுமி அருளையும், செல்வத்தை பெருக வைக்கும். இது வெறும் தீபம் அல்ல; அதை ஏற்றும் நேரம், வைக்கும் திசை, எண்ணெய் ஆகியவையும் முக்கியம். தீபாவளி நாளன்று எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் வற்றாமல் செல்வம் சேரும் என்பதை இங்கு காணலாம்.

36

கடுகு எண்ணெய் தீபம்

தீபாவளியில் கடுகு எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் துர்சக்திகள், கண் திருஷ்டி, துரதிஷ்டம் எல்லாமே நீங்கும். வீட்டில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரிகளை அடியோடு ஒழிக்கும். மனக்குழப்பம் நீங்கும். மன ஆரோக்கியம் மேம்படும். இந்தத் தீபம் ஏற்றினால் துன்பங்கள் நீங்கி மனத்தெளிவு பிறக்கும். ஏற்படும். தெய்வீக அருள் உங்களுக்கு காவலாக வரும்.

46

நல்லெண்ணெய் தீபம்

உடல், மன ஆரோக்கியம் தேடுபவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். மகாலட்சுமி ஸ்பரிசம் நல்லெண்ணெய்யில் இருப்பதாக நம்பப்படுகிறது. அளவில்லா செல்வத்தை ஈர்ப்பதுடன், கெட்ட சக்திகளை உங்கள் வாழ்வில் இருந்து நீக்கும். வற்றாத பண வரவுக்கு இந்த தீபம் ஏற்றலாம்.

56

நெய் தீபம்

தீபாவளி நாளில் நெய் தீபம் ஏற்றுபவர்களுக்கு எல்லை இல்லாத பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதில் உள்ள நேர்மறை ஆற்றல்கள் மனதையும், வீட்டையும் புதுப்பிக்கிறது. வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மகாலட்சுமியின் அருளை ஈர்க்கக்கூடிய சக்தி நெய் தீபத்திற்கு உண்டு. குடும்ப சமாதானம், மன நிம்மதி கிடைக்கும். இதை வீட்டில் ஏற்றுவதால் நம் கடந்தகால கர்மா அழிந்து, ஆன்மா சுத்தமாகும். பூரண நிம்மதி கிடைக்கும்.

66

தீபாவளி அன்று தீபம் ஏற்றுவதாக இருந்தால் இந்த மூன்று எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால் மூன்று விதமான எண்ணெய்களிலும் தீபத்தை ஏற்றி மகாலட்சுமியின் அருளை பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories