Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் புதன்-யமன்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது.!

Published : Oct 29, 2025, 03:16 PM IST

Tri Ekadash Yog 2025: அக்டோபர் 30-ஆம் தேதி புதன் மற்றும் புளூட்டோ ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் அமைந்து திரியேகாதச யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
புதன் புளூட்டோ இணைவு

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் கருதப்படுகிறார். இவர் கல்வி, பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் தோராயமாக 15 நாட்கள் வரை தங்குகிறார். எனவே மாதத்திற்கு இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். இதன் காரணமாக இவர் பிற கிரகங்களுடன் இணைந்து அல்லது அம்சத்தை ஏற்படுத்தி சுப யோகங்களை உருவாக்குகிறார். தற்போது புதன் பகவான் விருச்சிக ராசியில் செவ்வாய் பகவானுடன் இணைந்து பயணித்து வருகிறார்.

25
திரியேகாதச யோகம்

இந்த நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி மகர ராசியில் அமைந்துள்ள புளூட்டோ உடன் இணைந்து நன்மை பயக்கும் திருஷ்டி யோகத்தை உருவாக்குகிறார். இது ‘திரியேகாதச யோகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி மாலை 6:23 மணிக்கு புதன் மற்றும் புளூட்டோ இருவரும் 60 டிகிரி இடைவெளியில் இருப்பார்கள். இந்த யோகம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற போதிலும், மூன்று ராசியில் பிறந்தவர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

35
மேஷம்

திரியேகாதச யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமைகிறது. மேஷ ராசியின் எட்டாவது வீட்டில் புதன் பகவானும், புளூட்டோ பத்தாவது வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதிப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து கணிசமான ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக உழைத்தும் வெற்றி கிடைக்காத வேலைகளில் கூட வெற்றியைப் பெறுவீர்கள். செவ்வாய் கிரகமும் மேஷ ராசியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நீங்கள் பதவி மற்றும் கௌரவத்தையும் பெறுவீர்கள்.

45
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் புளூட்டோ இணைந்து உருவாக்கும் திரியேகாதச யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் புதிய பதவிகள் மற்றும் கௌரவத்தை அடைவீர்கள். தொழில் அல்லது வேலையில் போட்டியாளர்களின் சதியை முறியடித்து முன்னேறுவீர்கள். வணிகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் அறிவு சார்ந்த திறன்கள் விரைவாக அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

55
துலாம்

துலாம் ராசியில் புதன் பகவான் இரண்டாவது வீட்டில் அமர இருக்கிறார். இதன் மூலமாக உங்கள் பேச்சாற்றல் அதிகரிக்கும். உங்கள் பேச்சுத் திறமையை கொண்டு வணிகம் அல்லது பிற இடங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும். நீண்ட காலமாக நிலவையில் இருந்த பணிகள் முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். உறவினர்களுடன் உறவு மேலும் வலுப்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகளும் உண்டு. புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகமும் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories