
ஜோதிடத்தின்படி குரு மற்றும் சந்திரன் ஆகிய இரு சுப கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட ராசியில் இணையும் பொழுது அல்லது ஒருவருக்கொருவர் கேந்திர ஸ்தானங்களில் அமையும் பொழுது கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. குரு பகவான் செல்வம், ஞானம், மரியாதை, மங்கள நிகழ்வுகள், அதிர்ஷ்டம் ஆகியவற்றை வழங்கும் கிரகமாகவும், சந்திர பகவான் மனம், தாய், மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும் இருக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை யானையைப் போன்ற பலத்தையும், சிங்கத்தைப் போன்ற கௌரவத்தையும். அரசனைப் போன்ற செல்வத்தையும் தரக்கூடியதாக கருதப்படுகிறது.
அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக பெயர்ந்து கடக ராசியில் பயணித்து வருகிறார். அவர் தற்போது சந்திர பகவானுடன் ஒரு பரஸ்பர அம்சத்தில் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறார். அக்டோபர் மாதம் முடிவடையவுள்ள நிலையில் 29 ஆம் தேதி இந்த ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சிறப்பு பலன்களை தரவுள்ளது. இந்த ராஜயோகத்தால் ஆறு ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் கஜகேசரி ராஜயோகத்தால் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் தன லாபம் அல்லது முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஏற்கனவே இருக்கும் நிலை மாறி வசதிகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட கால இலட்சியங்கள் நிறைவேறும். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாக அமையும். அலுவலக விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி அமைதியான சூழல் நிலவும்.
கஜகேசரி ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும். திருமணமானவர்களுக்கு தாம்பத்ய சுகம் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய நபர்களின் நட்பு பயனுள்ளதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் பெருகும். வருமானம் இரட்டிப்பாகும். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதால் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குதல் அல்லது இருக்கும் தொழிலை விரிவாக்குவதில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்குபவர்கள் அல்லது அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ராசி காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நேர்மறையான பலன்களை அளிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். அதிர்ஷ்டம் உங்களின் பக்கம் இருக்கும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் அல்லது சட்ட சிக்கல்கள் தீரும். தொழில் செய்து வருபவர்களுக்கு போட்டியாளர்களும், எதிரிகளும் விலகுவதால் வருமானம் பெருகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுதலைப் பெறுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்த மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். திருமணம், வளைகாப்பு, குழந்தை பாக்கியம் ஆகியவை நடக்கும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு பெருகும். விரும்பிய துறைகளில் வெற்றியைப் பெறத் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்து திசைகளில் இருந்தும் பணவரவு கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரன் இணைவு காரணமாக வருமானம் அதிகரிக்கும். நிதி்நிலைமை பலமடைந்து ஆடம்பர கனவுகள் நிறைவேறும். நீண்ட கால இலக்குகள், கனவுகளை நிறைவேற்றும் காலம் நெருங்கியுள்ளது. குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய வீடு அல்லது நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு குருவின் பலத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சொத்துக்களை விற்க முடியாமல் தவித்து வருபவர்கள் நல்ல விலையில் சொத்துக்களை விற்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)