இந்த ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவியாக இருப்பார்களாம்.. நீங்க எந்த ராசி?

First Published | Jan 9, 2024, 4:44 PM IST

ஜோதிடத்தின் அடிப்படையில் அப்பாவியாக இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள்.. வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சிலர் வெகுளியாக அப்பாவித்தனமாக இருப்பார்கள். சிலர் ஒருவரையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அப்பாவியாக இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.. யார் எது சொன்னாலும் உடனே நம்பிவிடுவார்கள். அவர்களின் மனதில் விஷமத்தன்மையோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இருக்காது. இந்த அப்பாவித்தனத்திற்கும் ராசிகளுக்கும் தொடர்புள்ளது. ஜோதிடத்தின் அடிப்படையில் அப்பாவியாக இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம் : 

கடக ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் குழந்தைகளை போல கள்ளங்கபடமற்றவர்கள் என்று நம்புகிறார். மேலும் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறையும் பாசமும் காட்டுவார்களாம். இவர்களின் பாசத்தை மற்றவர்கள் புறக்கணிக்க முடியாத அளவு கடினமாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வது அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என எதுவாக இருந்தாலும், கடக ராசிக்காரர்கள் தங்கள் கள்ளங்கபடமில்லாத மனதை வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் அப்பாவியானவர்களாக கருதப்படுகின்றனர்.

Tap to resize

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாகவே இரக்க குணத்திற்கு பெயர் போனவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பதிலும் வல்லவர்கள். இவர்கள் பெரும்பாலும் அப்பாவியாகவே இருப்பார்கள். தங்களின் தெளிவான கற்பனைகள் மற்றும் இரக்க குணத்தின் மூலம் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுவார்கள். எனவே வஞ்சகம், கள்ளங்கபடமற்ற தூய்மையான அன்பை அவர்கள் கொண்டிருப்பார்கள். 

துலாம்

சமநிலை மற்றும் நல்லிணக்கட்திற்காக அறியப்பட்ட துலாம் ராசிக்காரர்கள் அப்பாவியாக இருப்பார்கள். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே காணும் இவர்கள் அனைவரும் நம்பவர்கள் என்று நம்புவார்கள். எனவே அமைதியானவர்களாவும், அப்பாவியாகவும் துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள். 

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பொதுவாகவே ஒரு குழந்தை போன்ற உற்சாகத்தைக் கொண்டுள்ளனர். எதையும் நம்பிக்கையுடன் பார்க்கும் இவர்கள் மற்றவர்களிடம் கள்ளங்கபடமற்ற அன்பை காட்டுவார்கள். எந்த கெட்ட எண்ணமும் இவர்களிடம் இருக்காது. எந்த சூழலிலும் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்று இவர்கள் கருதுவார்கள். எனவே பெரும்பாலும் இவர்கள் அப்பாவியாகவே இருப்பார்கள்.

Latest Videos

click me!