விபரீத ராஜயோகம் – 6 மாசத்துக்கு நீங்க தான் கோடீஸ்வரன்; பங்களா, பைக் காருன்னு வாழ்வீங்க!

Published : Nov 20, 2024, 11:23 AM IST

Top 6 Zodiac Signs Getting Viparita Raja Yoga Palan : விபரீத ராஜயோகம் உருவான நிலையில் இனி இந்த 6 ராசியினருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க

PREV
17
விபரீத ராஜயோகம் – 6 மாசத்துக்கு நீங்க தான் கோடீஸ்வரன்; பங்களா, பைக் காருன்னு வாழ்வீங்க!
Viparita Raja Yoga Palan Tamil, Top 6 Zodiac Signs Getting Viparita Raja Yoga Palan

கிரக நிலைகளின் மாற்றங்கள் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில் 6 ராசியினர் விபரீத ராஜயோகத்தின் பலனை அனுபவிக்க இருக்கிறார்கள். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் மற்றும் மீன ராசியினருக்கு விபரீத ராஜயோகத்தின் பலன் கிடைக்க இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்….

27
Top 6 Zodiac Signs Getting Viparita Raja Yoga Palan

கடகம் ராசி:

கடக ராசிக்கு, சனி எட்டாம் வீட்டு அதிபதியாகவும், எட்டாம் வீட்டில் இருப்பதாலும், விபரீத ராஜயோகம் உருவாகிறது. இது அடுத்த ஆண்டு மார்ச் 29 வரை நீடிக்கும். இதனால் தொழில் மற்றும் வேலையில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். நிறுவனத்தின் தலைவராகும் வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் புகழ் அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கான அறிகுறிகள் உள்ளன. வியாபாரம் லாபகரமாக இருக்கும்.

37
Zodiac Signs, Rasi Palan, Viparita Raja Yoga Palan Tamil

மீனம் ராசி:

மீன ராசிக்கு, சனி பன்னிரண்டாம் வீட்டு அதிபதியாக இருப்பதால் விபரீத ராஜயோகம் உருவாகிறது. மார்ச் 29 க்கு முன், வேலையில் இரண்டு பதவி உயர்வுகள் மற்றும் எதிர்பார்த்ததை விட அதிக சம்பள உயர்வு கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வருமானம் மிகவும் அதிகரிக்கும்.

47
Vipreet Raj Yoga, Viparita Rajayogam, Top 6 Lucky Zodiac Signs

கன்னி ராசி:

கன்னி ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 29 வரை நீடிக்கும் இந்த யோகம் உங்கள் பேச்சு மற்றும் செயலில் தாக்கத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் அதிகார யோகம் இருக்கும். புகழுக்கும் செல்வாக்குக்கும் பஞ்சமிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

57
Vipareeta Raja Yoga, Viparita Raja Yoga Palan Tamil

ரிஷபம் ராசி:

ரிஷப ராசிக்கு, சுக்கிரன் 6ஆம் வீட்டு அதிபதியாகவும், 8ஆம் வீட்டில் இருப்பதாலும், டிசம்பர் 2 வரை விபரீத ராஜயோகம் உள்ளது. வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களுடன் நன்மை பயக்கும் தொடர்புகள் ஏற்படும். பணவரவு உண்டாகும். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் அல்லது காதல் உறவு ஏற்படலாம்.

67
Viparita Rajayogam, Viparita Raja Yoga

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை மே 25 வரை ராஜபோகமாக இருக்கும். வேலையில் செல்வாக்கு மிகவும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது. பல வழிகளில் பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும்.

77
Viparita Raja Yoga Palan Tamil, Rajayoga Palan Tamil

மேஷம் ராசி:

ஆறாம் வீட்டு அதிபதியான புதன் 8ஆ வீட்டில் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி 4 வரை விபரீத ராஜயோகம் உள்ளது. இதனால் வருமானம் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். மதிப்புமிக்க சொத்துக்கள் கைமாறும். பொருளாதார பிரச்சனைகள் பெருமளவு குறையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories